அவனுடைய அவள்

நாதன் நம்ம கதையின் நாயகன் ஐபிஎஸ்க்கு தேர்வு எழுதிவிட்டு போஸ்டிங்கு காத்திருக்கிறான். பிரியா நாதனோட நாயகி சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறாள்.

ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தார்கள். ஆனால் இருவரும் பேசிக்கொண்டதே இல்லை உதட்டலவில் மட்டுமே . இருவரின் விழிகளும் பரிமாறி கொள்ளாத வார்த்தைகளே இல்லை எனலாம் .

நாதன் நண்பர்களுக்கு நிறைய உதவி பண்ணுவாரு எப்படின்னு கேட்குறின்களா ?

அந்த கல்லூரியில் காதலிக்கிறவங்க எல்லாருக்கும் கவிதை எழுதி தரதே இவரு தான் நிறைய‌ காதல் கதைகளுக்கு தாஜ்மகாலா இருந்தவரு தன் காதலுக்கு மட்டும் தாஜ்மகால் கட்ட முடியாமல் மனதுக்குள் தவித்து கொண்டு இருக்கிறார்.

பிரியா எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இயல்பா பழக கூடியவள். இவளும் நாதனின் நாதத்தில் அடிமை தான் .

சொல்ல மறந்துடனே பெயருக்கு ஏற்ப நாதன் இசையிலும் நல்ல புலமை பெற்றவர் தான்.

கல்லூரி முடிய இன்னும் ஒரு மாதம் இருக்கு இரண்டு பேரும் தைரியமாக இன்னைக்கு சொல்லிடனும் அப்படினு முடிவு பண்ணி பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்றா பிரியா. நாதன் வகுப்பறையில் அவள் தேடிட்டு பஸ் ஸ்டாப்க்கு வரான்.

பிரியா பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்றத பார்த்த உடனே இவன் இதயத்துடிப்பு அதிகமானது.




மூச்சு விட முடியாத அளவுக்கு அதே போல் தான் பிரியாவுக்கும் அவனை காண முடியாமல் கண்களை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

நாதன் அருகில் வர இதயம் ஒரு நிமிடம் நின்று விடும் போல இருந்தது.

முதல்ல நாதன் பேச தொடங்கினான்.

" ஹாய் பிரியா, உன்கிட்ட ஒன்னு பேசனும் " சொல்ல.

" சொல்லுங்க நாதன் நான் கூட என்று ஆரம்பித்தவள் " ஏதோ சிந்தித்தவளாய் நீங்க சொல்லுங்க" என்று முடித்தாள்.

" பிரியா நிமிர்ந்து என் கண்ண பாரு, உனக்கு என் பார்வையின் அர்த்தம் புரியும்னு நினைக்கிறேன். இருந்தாலும் அது நானா சொல்லனும் அப்படின்னு நீ எதிர் பார்க்குற நானே சொல்லிடறேன் உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படும் நீ என்ன சொல்ற" . என கூறி அமைதியானான்.

பிரியா எதுவும் பேசவில்லை அவள் கண்களில் வழிந்த கண்ணீர் ஆயிரம் பதில்களை ஒரு நொடியில் சொல்லி விட்டது.

அவன் கைகளை இறுக பற்றி " உன் வார்த்தையில் என் எண்ணங்களை கண்டேன். இப்போது பற்றிய உன் கைகளை என்றும் விடமாட்டேன் " என்றாள் .



அவனும் அவள் கை பற்றி என் அன்பே உன் முகத்தில் இருக்கும் புன்னகையில் தான் நான் வீழ்ந்தேன் . இப்போது எங்கே என் புன்னகை என்று கூறி

" ஹே என் அழகு ஸ்மைலி ஸ்மைல் ப்ளீஸ்டா" என்றான் .

இதை கேட்டவுடன் அவள் சிரித்துக்கொண்டே " சரிங்க கவிஞரே ! அப்போ எனக்கு ஒரு கவிதை சொல்லுங்க " என்றாள்.

உடனே,

" உன் ஒற்றை பார்வையில் வீழ்ந்து

உன் புன்னகையில் எழுந்து

என் காதல் உரைத்தேன் ஒரு கவியாக

என் பிரியமே உன் காதல் என்னை மட்டுமே சேர்ந்ததடி! "

அடுத்த அடுத்த கல்லூரி நாட்கள் காதலில் கசிந்துருகி முழுவதும் அந்த காதலால் இருவரும் ஆட்கொள்ளப்பட்டனர்.


தேர்வுகள் முடிந்து இருவரும் கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்தனர்.

கல்லூரி முடிந்து ஒரு வருடம் ஆகிறது.

பிரியா சென்னையில் ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறாள்.

நாதன் ஐபிஎஸ் போஸ்டிங்கிற்காக காத்திருக்கிறான் .

நாதன் மட்டும் அல்ல அவர்கள் காதலும் தான்.


இன்னும் இரண்டு நாட்களில் போஸ்டங்கான லெட்டர் வரும் என்று காத்திருந்தான்.

பிரியாவும் அவனை காண வேண்டும் என்று சென்னையில் இருந்து வந்தாள்.

இவன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தான்.

அந்த மாலைப்பொழுதில் அவள் வருவதை காண நிலா விண்ணிலிருந்து இறங்கி வருவது போல் இருந்தது.

அவளுக்கும் மாலைவேளை இளஞ்சிவப்பு சூரியனை போல் இவன் தெரிந்தான்.

இருவரும் பார்த்துக்கொண்டே ஒருவரை நோக்கி ஒருவர் வந்து கொண்டிருந்தனர்.

மூன்று மாதங்களுக்கு பிறகு ஏற்படும் முதல் பார்வை .

பார்வையின் தழுவல்கள் இனிமையாக நடந்தேறியது. அவர்களை சுற்றி நிறைய ஆட்கள் இருந்தாலும் யாரும் இல்லாத ஒரு உணர்வில் கண்கள் தழுவி கொண்டன.

" மாமா எப்படி இருக்க? ".

" நல்லா இருக்கேன் பொண்டாட்டி. நீ எப்படி இருக்க".

" ம்ம் நல்லா இருக்கேன் மாமா ".

" என்னை எங்கயாவது உன் பைக்ல கூட்டிட்டு போறியா? "

"உன் கூட சற்று தனியா இருக்கணும்".

" என்னடி மைடியர் பொண்டாட்டி மாமா மேல் சேம ப்லீங் போல் கம் டியர் வீ கோ" .

கல்லூரி காலத்தில் சென்ற அதே கடற்கரை சற்றே மாறி இருந்தது.

கடற்கரை மணலில் அமர்ந்து கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தார்கள்.




அலையை பார்த்துக்கொண்டே " மாமா என்னை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா " .

" இரண்டு நாள் வெய்ட் பண்ணுடி நான் என் மாமனார் கிட்ட உன் மாமனாரை கூட்டிட்டுவந்து பேசுறன்டி ".

" சரி மாமா நாம் அலைல கொஞ்ச நேரம் நிற்கலாமா?".

" இது கேட்கணுமா ! வா போலாம்".

கடல் அலைகள்ல சின்ன பசங்க மாதிரி தான் விளையாடுவார்கள்.

அப்போ மழை ஆரம்பிக்குது கடல் , மழை இவைகளுடன் காதல் நாதன் ப்ரியாவுக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் அவனை அணைத்துக் கொண்டாள்.

பிறகு என்ன‌ காதலின் எல்லைக்குள் கொஞ்சல்கள் நடந்தேறியது.

பின் இருவருக்கும் பிடித்தமான டீ கடையில் டீ சுவைத்து விட்டு அவளை பஸ் ஏற்றிவிட்டு இவனும் கிளம்புகிறான்.

தொலைபேசியில் தொடர்ந்து உரையாடல் தொடர்ந்தது.

" சார் போஸ்ட் " குரல் கேட்டு நாதன் வாசலுக்கு வந்தான்.

போஸ்டிங்குகான ஆர்டர் வந்திருந்தது. அவனுக்கும் சென்னையில் போஸ்ட்டிங் கிடைத்தது.

" அம்மா எனக்கு சென்னையில் போஸ்டிங் போட்டு இருக்காங்க" அம்மா அவனை அள்ளி அணைத்து ஆசீர்வதித்தார்கள்.

" அப்பறம் அம்மா நான் சொன்னே பிரியா பத்தி அவங்க வீட்டுக்கு போய் பேசிட்டு வரனும் மா"
என்றான்.

" ம்ம் வேலை கிடைத்ததுமேவா சரி அப்பாகிட்ட சொல்றேன் "

" நாள் பார்த்து அவங்க வீட்டுக்கு போலாம்".

பிறகு வீட்டில் திருமண பேச்சுக்கள் வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தது.

அவன் அவளுக்கு போன் செய்தான்.

அவள் காலையிலேயே கோவிலுக்கு சென்று விட்டாள். அவன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு அலைபேசியின் அழைப்புக்கு காத்திருந்தாள்.




" ஹாய் பொண்டாட்டி என்ன பண்ற , எப்படி இருக்க".

அவன் பழக்கம் ‌அது காலையில் பார்த்து இருந்தாலும் மாலையில் மீண்டும் இதே விசாரிப்புகள் இருக்கும்.

" ஹே மாம்ஸ் போஸ்டிங் எங்க போட்டு இருக்காங்க சொல்லு"

" நீயே கண்டுபிடி என் பொண்டாட்டி"

" மாமா என் யோசிக்க வைக்காதே எனக்கு மூளை இல்லனு உனக்கு தெரியும்ல சொல்லு"

"சரி சென்னையில"

" சூப்பர் மாமா நீ , அப்போ இரண்டு பேரும் சென்னையில இனி நமக்கு செய் ஜாலி தான் எப்பவுமே ஒன்னா இருக்கலாம்".

" எப்போ வேலைல சேரணும்".

"2 மாசம் இருக்கு இப்போ சொல்லுடி என் பொண்டாட்டி என் மாமனார் கிட்ட வந்து பேசவா".

" சரி மாம்ஸ் என் மாமனார கூட்டிட்டு வந்து உன்‌ மாமனார் கிட்ட பேசு ஆன எப்போ வருவ அப்போ தான் நான் வீட்ல சொல்ல முடியும்".

" நாளைக்கு வரோம்".

" சரி நானும் பேசிடறன்".

இவள் தன் தாய் தந்தையை சம்மதிக்க வைத்துவிட்டாள்.

மறுநாள் இருவீட்டாரும் பேசினார்கள் பிடித்து போனது திருமண நிச்சயதார்த்தம் எல்லாம் முடிவு செய்யப்பட்டது.

இருவரும் இணைந்து திருமண வேலைகளை செய்தனர்.

திருமணத்திற்கு முதல்நாள் பெண் அழைப்பு தாய் தந்தையிடம் பிரியாவிடை பெற்றாள். கண்களில் மட்டும் நீர்த்துளிகள் தெரிந்தது.

அனைவரும் திருமணத்திற்கு வந்து சேர்ந்தனர்.

போட்டோக்கள் எடுத்து முடிந்தது இருவரின் மனமும் ஆனந்தத்தில் இணைந்து இருந்தது.

தங்கள் காதல் நினைவுகளை பகிர்ந்து கொள்ள பிரியா " நாளைக்கு நான் திருமதி . நாதன் ஆகி இருப்பேன் " என்று சொல்ல.

நாதன் " ஆமாம் நாளைக்கு நீ முழுசா என்னவள் ஆகி இருப்பாய் " என்று சொல்லி கண்ணடிக்க.

வெட்கத்துடன் அவள் அவனை அணைத்து கொண்டாள்.

காலை பொழுது வாழைமரங்களும் , மலர் தோரணங்களும் , சந்தன பன்னீர் மலர்களுடனே திருமண வரவேற்பு நடைபெற்றது.

மணமேடையில் ஐயர் ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தார்.

மணப்பெண்ணும் மணவாளனும் தயார் ஆகிவிட்டனர்.

" மாப்பிள்ளையை கூட்டிண்டு வாங்கோ".

திருமண உடையில் கம்பீரமாக நடந்து வந்தான்.

ஆண்மையின் பேரழகை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தனர்.

அனைவரையும் வணங்கி விட்டு மணமேடையில் நாதன் அமர்ந்தான். திருமண சடங்குகள் தொடங்கின.

" பொண்ண கூட்டிண்டு வாங்கோ".

அவள் வருகிறாளா என்று அவன் கண்கள் தேட இதோ கண்களில் வீழ்ந்து விட்டாள்.

பட்டாடை உடுத்தி சிவந்த கைகளில் மருதாணி மேலும் வண்ணம் சேர்க்க கை‌ நிறைய வளையல்கள் இட்டு கால் கொலுசு ஒலிக்க அன்னம் அவள் அசைந்து வருகையில் அவன் மனத்தில் நில நடுக்கம் உண்டாகி உறைந்து போனான். நண்பனின் கைபட்டு நினைவுக்கு வந்தான்.

அவள் அவனருகில் அமர்ந்து அவன் கண்களை நோக்கி மற்றவர் செவியறியாமல் " மாமனே என் மன்னவனே உன்னை மணக்க நான் ஏங்கிய நொடிகள் எல்லாம் ஓய்ந்தோழிந்து போனது இனி உன்னவளாகவே உன்னுடனே என் காதல் வாழ்வை கலந்து விட்டேன் கண்ணாளனே ! என்றாள்.

அவள் கூறியதை கேட்டு காதலில் அவனும் கரைந்து தான் போனான்.

அந்த ஒரு நொடியில் இருவரின் கண்களும் தங்கள் காதலர்களை ரசித்து கொண்டன.

நேரம் நெருங்கி விட்டது மங்கள இசை முழங்க மஞ்சள் அட்சதை துவக்க திருமாங்கல்யத்தால் அவளை அவனுடையவள் ஆக்கி கொண்டான்.


No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave