கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
கண்ணார காண - love see
கண்ணார காண
உன் அமுத கானம் கேட்க
காத்திருந்த நொடிகள்
எல்லாம்
கனவாய் கலைந்து போக
ஆசை கொண்டேன் !
நீ உதிக்கும் நேரம் பார்த்து
ஏக்கம் கொண்டேன் !
உன் ஸ்பரிசம் உணர
என் ஸ்பரிசம்
உயிர்ப்பித்தேன் !
வாடிய போதெல்லாம் வாஞ்சையாக
நீர் வார்த்தேன் கண்களால் !
காலமும் கரைந்தது
என் கண்ணீரும்
வறண்டது கண்ணார
நான் காண காலம் இன்னும் ஆகுமோ !
மனதின் காட்சி பிழை - Radha One Side Love
மனதின் காட்சி பிழை
மாற்று கருத்தை மனம் அறிந்த
பின்னும் ஏன் உன் எண்ணங்கள்
மனதை மயிலிறகாய்
வருடுகிறது கண்ணா ! உன்
குழல் இசை கேட்கும் போது
எல்லாம் ஓடி வந்த ராதை இன்று
உன் குழல் முறிக்க காரணம்
என்ன ? மீண்டும் கேட்கும் குழல்
ஓசை அவளை உன்னை நோக்கி
அழைக்க கூடாதென்றா ! ம்ம் ம்ம்
காதல் என்றும் மனதின்
காட்சி பிழை தான் !
லவ்லி
இயற்கை மருத்துவம் - தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி -Headache Medicine
அதிமதுர சூரணம்- தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீர
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் பொடி -35 கிராம்
சோம்பு பொடி - 35 கிராம்
சர்க்கரை - 35 கிராம்
கொடிவேலி வேர்ப்பட்டை பொடி - 17 கிராம்
செய்முறை :
அதிமதுரம் , சோம்பு , சர்க்கரை , கொடிவேலி வேர்ப்பட்டை இவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை :
இந்த பொடியை 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து தேன், நெய் அல்லது பால் இவற்றில் ஏதோ ஒன்றில் கலந்து உட்கொண்டால் தலைவலி , ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீரும்
-Dr.சுஜிதா
மோர் குழம்பு - பட்டுக்கோட்டை சமையல் - more kuzhambu
மோர் குழம்பு:
தேவையான பொருட்கள் :
தயிர் - 1/2 லிட்டர் நன்கு அடித்து வைத்துகொள்ளவும்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 டிஸ்பூன்
சீரகத்தூள் - 1 டிஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டிஸ்பூன்
வெண்டைக்காய் - 5
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1/4 டிஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை :
அடுப்பை பற்ற வைத்து அதில் வானலியை வைத்து சூடானதும் ஆயில் தேவையான அளவு ஊற்றி ஆயில் சூடானவுடன் தாளிக்க கடுகு சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வெண்டைக்காய் சேர்த்து அதன் வழவழப்பு போகும் வரை நன்கு வதக்கவும். வெண்டைக்காய் நன்கு வதங்கிய பின் சீரகத்தூள், மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அடுப்பை குறைந்து வைத்து விட்டு அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். கொதிக்க விட கூடாது. சுவையான மோர்க்குழம்பு தயார் .- அகல்யா பிரேம்

Subscribe to:
Posts (Atom)
-
மன்னித்து விடு மனமே மன்னித்து விடு மனமே என்றுமே உன்னை நான் உடைத்து கொண்டே இருக்கிறேன் ! உன் வலிகளை உணர்கிறேன் இருந்தும்...
-
மீண்டும் ராதாகிருஷ்ணராய் மீண்டும் பிருந்தாவனத்தில் நாம் ராதாகிருஷ்ணனாய் பிறக்க வேண்டும் அங்கே யமுனை நதி கரையோரம் நீ குழலிசைக்க...