அவனுடைய அவள் - பகுதி 2

கதை சுருக்கம் : நாதன் பிரியா காதலித்து பெற்றவரின் சம்மதம் பெற்று திருமணம் செய்தவர்கள். அவர்களின் காதல் கதை அவனுடைய அவள்  பகுதி 1ல் உள்ளது.
நாதன்  பிரியா திருமணம் மாங்கல்யதானம் செய்து வைத்து அவனுடைய அவளாய் மாறினால் மற்றவருக்காக அவன் காதல் உரைத்த அன்றே அவள் அவனுக்கு சொந்தமாகிவிட்டாள்
 .

மீதமுள்ள திருமண சடங்குகள் முடிந்த பிறகு இருவருக்கும் சற்று ஓய்வு கிடைத்தது .
நாதன் கண்களில் காதலுடன் பிரியாவை பார்த்து " என்னடி பொண்டாட்டி இன்று எனக்கு எல்லாருக்கும் முன் பொண்டாட்டி ஆகிவிட்டாய்"
"இனி யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது" என்று ஓரப்பார்வையால்  அவளை நாண
செய்தான் .
பிரியாவோ "ஆமாம் மாமா இனி எந்த ஒரு பிரச்சினையும் இல்ல  நீ எனக்கு கிடைச்சிட்ட
என்று கூறி அவன் மடியில் தலை சாய்ந்தாள்.


அவள் கண்களின் ஓரம் நீர் வழிந்தது அவன் வேஷ்டியை நனைத்தது .
நாதனோ பதறிபோய் "ஏய் பொண்டாட்டி ஏன் இப்படி  அழற நாம சேர்ந்தது எவ்வளவு சந்தோஷமா இருக்கு நீ இப்ப போய் அழற கல்யாணம் ஆகி எதாவது கிஃப்ட் தருவனு நானும் வெய்ட் பண்றேன் நீ என்னடான்னா இப்படி பண்ற".
அவளுக்கும் நாணம் வந்து சிரித்து விட்டாள்.
" என்ன கிஃப்ட் வேணும் மாமா "


' எது கொடுத்தாலும் எனக்கு ஓகே பா ஏங்க வேணாலும் கொடுக்கலாம் " என்றான் அவன் முகத்தை அவள் அருகில் கொண்டு வந்து.
பிரியா சிரித்துக்கொண்டே " இன்னும் கிட்ட வா மாமா " கூறி அவன் கன்னத்தில் கொடுத்தால் கைகளால் சற்றே பலமாக‌.
நாதன் திடுக்கிட்டு " ம்ம் இப்பதான் கல்யாணம் முடிந்தது அதுக்குள்ள  பொண்டாட்டி புதிய அடிக்கிறா இன்னும் என்ன எண்ண பண்ணுவாளோ என்ன காப்பாதத்த யாரும் இல்லையா" என்றான்.
பிரியா அவன் இப்படி கூறிக்கொண்டு இருக்கும் போதே பரிசை கொடுத்துவிட்டாள். வேறென்ன நாதன் எதிர்பார்த்தது தான் கன்னத்தில் கிடைத்தது.
ஆனால் பதில் பரிசை நாதன் அவளின் இதழ்களில் கொடுத்து விட்டான்.


பிறகென்ன மணமக்கள் இல்லம் அழைத்து செல்லப்பட்டனர்.
பிரியாவின் இல்லத்திற்கு அங்கே மணமக்களுக்கு ஆலம் கரைத்து திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து சென்றனர். பின் என்ன பால் பழம் கொடுக்கப்பட்டது.
மற்ற சடங்குகளும் முடிவடைந்தது.
இரவு உணவிற்கு பின் சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.
படுக்கை அறை முழுவதும் பூக்களாலும் மெழுகுவர்த்திகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


பிரியாவிற்கும் அலங்காரம் முடிந்தது பின்
நாதன் பிரியா இருவருக்கும் நலங்கு வைக்கப்பட்டு பெரியவர்கள் ஆசி வழங்கி நாதனை முதலில் அனுப்பி வைத்தனர்.
பின் வழக்கமாக படங்களில் வரும் அறிவுரைகளுக்கு பின் பிரியா பாலுடன் படுக்கை அறைக்கு சென்றாள்.
கதவை தாளிட்டு நாதன் அருகில் செல்லாமல் தள்ளியே நின்றாள்.
நாதன் அவளை கண்டு " ஏய் பொண்டாட்டி ஏன் அங்க நிக்கிற " என்றான்.
பிரியா " இல்ல மாமா உன் கிட்ட வன எனக்கு பயமா இருக்கு "
" அடிப்பாவி ஏன்டி உனக்கு இந்த கொலவெறி
ஒரு பச்சை பள்ளைய பார்த்து பயமா இருக்குனு
சொல்ற "
" இல்ல அது வந்து "
" எதுவும் வர‌வேணா நீ இங்க வா "
" மாமா அது வந்து மாமா நீ நல்ல மாமா‌தான
நீ போய் தூங்கிடு "
" ஓய் என்ன இங்க வாடி "
பால் வாங்கி மேசைல வச்சிட்டு பிரியாவை
அழைத்து அமரச்செய்து தானும் அருகில்
அமர்ந்து கொண்டான்.
" என்ன ஆச்சு ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கடி"
" ஏன்னு தெரில ஒரு மாறி ரொம்ப பயமா இருக்கு இப்படி நடக்கும்னு தெரியும் ஆனாலும் "
" சரி ஒன்னும் வேணாம் நீ தூங்கு " என்றான்
"சாரி மாமா " என்று சொல்லி நாதனை அணைத்து கொண்டு உறங்க சென்றாள்.


பிறகென்ன வேண்டாம் என்றது நிகழ்ந்தது.
மறுநாள் விடியற்காலை எழுந்து குளித்து இருவரும் வெளியே சென்றார்கள்.
ஏங்க என்று தான் கேட்குறீங்க வேற எங்க போவாங்க அவங் எப்பவும் போற அதே கடற்கரைக்கு தான்.  சூரியோதயத்தை பார்க்க அந்த கடற்கரை மாறவில்லை .
இவர்கள் மட்டுமே மாறி போனார்கள் காதலர்களில் இருந்து கனவன் மனைவியாய்.
ஆழ்கடலில் இருந்து ஆதவன் ஆரஞ்சு நிற பிழம்பாய் வெளிவந்தான்.
இன்றிலிருந்து இவர்கள் வாழ்விலும் புது உதயமே.


இன்று இங்கு ‌முடிப்போம். பிறகு சென்னையில்
சந்திப்போம். நம்ம ஐபிஎஸ் வீர தீரமெல்லாம் பார்க்கனும். பிறகு இவர்களின் வாழ்வின் மகிழ்வில் பங்குகொள்ளனும்ல.
தொடரும்.....

1 comment:

காதல் அலை- Love Wave