Showing posts with label அழ துணை யாரோ - whose is ?. Show all posts
Showing posts with label அழ துணை யாரோ - whose is ?. Show all posts

ஏது ? ஏன் ? எப்படி ? (தமிழ் கவிதை) Why-How-which-love

ஏது ? ஏன் ? எப்படி ?
நான் புன்னகைத்து கொண்டே 
இருக்கிறேன் !
 என் விழிகள் 
இதழ்கள் என அனைத்தும் 
புன்னகையால் பூக்கிறது ! 
என்னால் என்னை சுற்றி 
அனைவருக்கும் புன்னகை 
தவழுகிறது ! 
ஏன் என் மனம் 
மட்டும் எதையோ தொலைத்ததை
போல் உணர்கிறது ! எதை 
தொலைத்தேன் என்று 
விளங்கவில்லை ! 
மனம் மட்டும்   
எதையோ இழந்து விட்டதாய் 
உணர்த்துகிறது !
 எது ஏன் எப்படி அறியேன்
 அறியவும் விழையேன்
என் மனமே !
லவ்லி

கர்வம் கலைந்தேன் - (தமிழ் கவிதை) - My piece of love


கர்வம் கலைந்தேன்
என் புன்னகையை எண்ணி
கர்வம் கொண்டேன் ! 
இன்று 
ஆயிரம் மலர்களின் இதழ்கள்
மலர்ந்ததை
 கண்ட போது
என் கர்வம் ஒடிங்கி போனது
என்னுள்ளும் 
இதழ்  கொண்டு 
காதல் அம்பை 
ஏய்துவிட்டாள் !
லவ்லி

ஏழடிக்கான ஏக்கம் (தமிழ் கவிதை) - feeling of love (Tamil Kavithaigal)

ஏழடிக்கான ஏக்கம்
என் பாதம் தொட்டு உன் உரிமையை 
நிலை நாட்ட விரும்பினாய்
நானும் அதற்காகவே 
காத்திருக்கிறேன்
உன் கைகளால் நீ என்
உரிமையை நிலைநாட்ட
வானில் தெரியும் அவளை 
இருவரும் இணைந்து 
காண
ஏழடி எடுத்து வைத்து 
உன்னவள் ஆக 
நானும் ஏக்கம் கொள்கிறேன்

அழ துணை யாரோ - whose is ?

அழ துணை யாரோ
உன்னை நினைத்தால் மட்டும் 
ஏன் என் கண்கள் கனலாகிறது !
காதலாலா அல்லது உன்னை 
காணவில்லை என்பதாலா ! 
நினைத்து அழ நீ இருக்கிறாய் !
நான் அணைத்து அழ யார் 
இருக்கிறார் !
லவ்லி

காதல் அலை- Love Wave