உன்னில் நானாய் ! உதிர்ந்த நாட்களில் சிலவற்றை இங்கு என் வரிகளாய் வரைகிறேன்.
காதல் என்னும் ஒரு சொல் நம் வாழ்வில் அணைவரும் கடந்து வந்த ஒரு இனிமையான பக்கங்கள் .
காதல் கொண்டவன் நம் நாதன் பிரியாவின் பேரன்பில் ....
பிரியா நாதன் மேல் மையல் கொண்டு நாதனை தன்னவனாக மட்டுமே பார்க்கக்கூடியவள் ..
எல்லா இடங்களிலும் இருவருமே தங்கள் பார்வைகளை பரிமாற்றம் செய்து அவர் அவர் மனதில் மட்டுமே காதல் விதையை விருட்சமாக வளர செய்துவிட்டனர்.
தினமும் டைரி எழுதும் வழக்கம் கொண்டவன் .
அவன் டைரி பக்கங்கள் அனைத்தும் அவள் பெயரை மட்டுமே கூறிக்கொண்டு இருக்கும்.
இருவரும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். பிரியா சில வருடங்களுக்கு முன் தன் குடும்பத்துடன் நாதன் ஊருக்கு குடி பெயர்ந்தனர்.
அருகாமை என்றாலும் இருவரும் சந்தித்துக் கொள்ள ஒரு ஆண்டு காலம் பிடித்தது.
முதல் முறையாக ஊர் கோவில் திருவிழாவில் தான் பார்த்துக்கொண்டனர்.
கூட்ட நெரிசலில் அவள் அவன் மீது இடித்து விட்டு
" சாரிங்க , கூட்டத்தில் தெரியாம் இடிச்சிடேன் தப்பா எடுத்துக்காதீங்க " என்றாள்.
" பரவாயில்லை கூட்டத்தில் தான அதுக்கு என்ன பண்ண முடியும். இட்ஸ் ஓகே கண்மணி !" என்றான்.
" என்ன சொன்னிங்க " என்றாள் பிரியா .
" இட்ஸ் ஓகே சொன்னப்பா"
" இல்ல அதுக்கு அப்புறம் ஏதோ சொன்னீங்க "
" ஓ ! அதுவா கண்மணி அப்படின்னு சொன்ன "
" எது கண்மணியா "
" ஆமாம் கண்மணி தான். இப்பவே உன்கிட்ட சொல்லிடறேன் "
" என்ன ? "
" உன்னை பார்த்த நொடி நீ
என்னுள் கோடி மின்னலாய்
இறங்கி விட்டாயடி !
என் கண்மணியே ! " என்றான்.
என்னுள் கோடி மின்னலாய்
இறங்கி விட்டாயடி !
என் கண்மணியே ! " என்றான்.
இவளோ சிறு புன்னகையுடன் " ம்ம் பார்றா கவிதை கூட சொல்லுவீங்ஙளா ? சரி கவிதை ரொம்ப நல்ல இருக்கு ஆனா அத என்கிட்ட சொல்லி வேஸ்ட் பண்ணிடிங்களே ! "
உள்ளுக்குள் இவளோ
" நீ மட்டும் என்னடா !
உன் கண் கொண்டு என்
பெண்மையை உணர செய்து விட்டாயே !
நான் எப்படி உன்னிடம் உரைப்பேன்
உன்னை பார்த்த நொடி என்னை உன்னுள் தொலைத்தேன் என்று
பெண்ணின் மனதை இறைவன்
ஊமையாக அல்லவா படைத்துவிட்டான் "
" நீ மட்டும் என்னடா !
உன் கண் கொண்டு என்
பெண்மையை உணர செய்து விட்டாயே !
நான் எப்படி உன்னிடம் உரைப்பேன்
உன்னை பார்த்த நொடி என்னை உன்னுள் தொலைத்தேன் என்று
பெண்ணின் மனதை இறைவன்
ஊமையாக அல்லவா படைத்துவிட்டான் "
" ஹலோ ! எங்க டீர்ம் போய்டிங்கலா ? " என்றான்.
" ஆமாம் உங்கள நினைச்சு கனவு வேற காணுறாங்க ".
" சரி உன் பெயர் என்ன ?"
" ஏன் சொல்ல முடியாது ".
அப்போ அவள் தோழி " ஹே பிரியா வாடி இங்க பலூன் விக்கிறாங்க" என்று கூற இவள் பெயர் இவனுக்கும் தெரிந்தது.
" பிரியா பிரியா ஓஓஓ பிரியா
பிரியா பிரியா என் பிரியா "
பிரியா பிரியா என் பிரியா "
என்று பாட ஆரம்பித்தான்.
அவள் அவனை பார்த்து விட்டு முகத்தில் கோபமும் மனதில் மகிழ்ச்சியாகவும் பலூன் வாங்க சென்றாள்.
அவனும் பின் தொடர்ந்து வந்து அவள் மழலை போல் விளையாடுவதை ரசித்து கொண்டு இருந்தான்.
திருவிழா சந்திப்பிலேயே காதல் தொடங்கியது.
அடுத்த சந்திப்பிற்கு இரண்டு வார காலம் தேவைப்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் தேடிக்கொண்டு இருந்தனர்.
இறுதியில் பிரியாவின் தோழி வீட்டிற்கு செல்ல வேண்டிய சூழல் , கல்லூரி தோழி தேவி உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கல்லூரிக்கு வர இயலவில்லை.
அவளுக்கு குறிப்புகள் கொடுக்க சென்றாள் பிரியா.
காலிங் பெல்லை அழுத்தி விட்டு காத்திருந்தாள்.
கதவை யாரும் திறக்கவில்லை.
சரி என்று கதவை திறக்க தள்ளினாள் . அப்போது உள்ளிருந்து ஒரு கரம் கதவை திறந்தது.
இருவரும் ஒரே நேரத்தில் முயற்சி செய்ய இருவரும் நன்றாக மோதிக்கொண்டனர்.
மோதிய பிறகு ஒரு குரல்" ம்ம் இது தான் உனக்கு வேலையா ? எப்பொழுதும் ஏன் என் மேலயே மோதுற ? .
இவள் நிமிர்ந்து பார்த்தாள் அங்கே நாதன் நிற்கிறான்.
பிரியாவிற்கோ மகிழ்ச்சியும் வெட்கமும் கலந்து வர அதை மறைக்க முயற்சி செய்து தோற்றுபோனாள் . இருப்பினும்
" நீ இங்கே என்ன செய்ற ? என்றாள்.
" என் வீட்டுக்கு வந்து என்னை பார்த்து என்ன பண்றனு கேக்குற ".
" இது உன் வீடா? "
"இல்ல நம்ம வீடு" என கூறி கண்ணடிக்க.
இவள் வெட்கத்துடன் " ம் சரி நான் தேவிக்கு குறிப்புகள் கொடுக்கவந்தன் அவள் பார்க்கலாமா ! ".
" ம்ம் பார்க்கலாமே! ஆனா அவ ஹாஸ்பிடல் போய் இருக்கா நீ வந்து உள்ள வெய்ட் பண்ணுடி".
" எது டி யா?"
" ஆமாடி பொண்டாட்டி ".
" நாம் பார்க்குறது இது தான் இரண்டாவது முறை அதுக்குள்ள எப்படி ?"
" நீ உள்ள வா சொல்றேன்"
" நம்பி வரலாமா ? "
" நான் உன்ன எதுவும் பண்ண மாட்டேன் வா ! "
" சரி சொல்லு தேவி எப்போ வருவா ? என கேட்டு கொண்டே அவள் கால்களை எடுத்து உள்ளவைக்க.
ஹே ஹே வெய்ட் வலது காலை எடுத்து வைத்து வாடி!
" ஒய் என்ன ரொம்ப பண்ற சரி சரி வரன்"
" உள்ளே வந்து அமர்ந்தாள்."
கண்களை வீடு முழுவதும் ஓட விட்டாள். மிக அழகாக இருந்தது .
நாதன் அவள் பக்கத்தில் அமர்ந்துவிட்டான.
ஒரு நிமிடம் பிரியாவுக்கு வேர்த்து விட உடனே
" ஹே என்னடி இப்படி வேர்க்குது "
" பின்ன நீ வந்து பக்கத்தில் உட்கார்ந்தா அப்படி தான் ஆகும்".
" சரி நான் ஒன்னும் பண்ண மாட்டன்டி!"
" சரி சொல்லு "
" உன்னை பார்த்த அன்றைக்கே முடிவு செய்து விட்டேன் நீ தான் என் பொண்டாட்டினு "
" டேய் ! மாமா "
" ஹே என்னடி சொன்ன இப்போ"
" நான் என்ன சொன்ன ஒன்னும் சொல்லலயே!"
" மாமா தான் சொன்ன"
" ஆமாம் அதுக்கு என்ன இப்போ?"
" உன்னை எங்கலா தேடின தெரியுமா!"
"உன்ன கண்டுபிடிக்க இரண்டு வாரம் ஆகி இருக்கு சரி எப்போ என்ன கல்யாணம் பண்ணிக்க போற" என்று பிரியா கேட்க.
" நாளைக்கு காலேஜ்ல தெரியும் "
பிரியா குறிப்புகளை கொடுத்து விட்டு செல்ல முற்பட நாதன் அவள் கைவைளைத்து அணைத்து நெற்றியில் இதழ் பதித்துவிட்டான்.
பிரியா ஒரு நிமிடம் அசைவற்று நின்று விட்டாள்.
மறுநாள் கல்லூரி செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள்.
திடீரென்று அவள் முன் வந்து நாதன் நின்று கை நீட்டினான்.
இவள் என்ன என்பதை போல் பார்த்தாள்.
"கை கொடு என் கூட வா!"
" எங்க போறோம் !"
" சொல்ல மாட்டேன் நீ வா!"
காதல் எதையும் யாரையும் யோசிக்க விடுவதில்லை.
அவன் கைகளை இறுக பற்றி கொண்டு அவன் பின் சென்றாள்.
அவளை பைக்கில் ஏற்றி கொண்டு சென்றான் முதலில் அவன் கண்ணில்பட்டது ஒரு தேவாலயம் அங்கே பைக்கை நிறுத்தி விட்டு அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான்.
அங்கே பாதிரியார் இருந்தார் பிரியாவை அங்கே அமர சொல்லி பாதிரியாரிடம் சென்று ஏதோ பேசினான்.
மீண்டும் திரும்பி வந்து "வா இது நான் உனக்கு தரும் முதல் பரிசு" என்றான்.
இவள் யோசிக்கும் முன் அவர்கள் திருமணம் நடந்தேறியது.
தன்னிடம் உள்ள மோதிரங்களை இருவரும் மாற்றிக்கொள்ள இரண்டு வார காதல் திருமணத்தில் முடிந்தது.
இருவருக்கும் மகிழ்ச்சி ஆனால் பெற்றார்களை நினைத்து பயந்தாள்.
நாதன் சற்று யோசிக்கவில்லை.
அவளை தூக்கிக்கொண்டு தேவாலயத்தின் வாசலுக்கு வந்தான்.
அங்கிருந்து அவள் கையை இறுக பற்றி கொண்டு அவன் இல்லம் நோக்கி சென்றான்.
கதவை திறந்தது நாதனின் தாய் தான் இருவரையும் பார்த்து கடிந்து கொண்டார்.
மிக பெரிய பிரளயமே நடந்தேறியது . பின் சமாதானம் ஆகி இருவரையும் உள்ளே அழைத்து சென்று விட்டார்கள்.
பிரியாவின் தாய் தந்தை அடுத்த பிரளயத்தை ஆரம்பித்தார்கள்.
அவர்களை சமாதானம் செய்துவிட்டான் நாதன்.
நாதன் பேச்சிற்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டு தான் ஆவார்கள்.
அவன் வார்த்தைகள் அவ்வளவு இனிமையாக இருக்கும்.
நாதன் போல ஒரு மாப்பிள்ளை கிடைத்ததால் யார் தான் வேண்டாம் என்பார்கள்.
நாதன் வழக்கறிஞர் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் உண்மைக்கு துணையாகவும் இருப்பவன்.
இரு வீட்டாரும் சம்மதிக்க மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது.
இந்து முறைப்படி திருமணம் நடந்தேறியது.
இரண்டு வார காதல் எப்படி இறுதி வரை நிலைத்து நிற்கும் என அனைவரும் சந்தேகிக்க.
நாதனும் பிரியாவும் இணைபிரியாமல் இரட்டை தேவதைகளுக்கு தாய் தந்தையாகி இன்பமாய் இல்லறம் செய்து கொண்டு இருக்கின்றனர்.
காதலில் காலங்கள் முக்கியம் அல்ல உண்மையான அன்பு மட்டுமே முக்கியம்.
உனக்குள் நான் உருகி உன்னில் என்னை உணர்ந்த நொடி தான் நம் காதல் வெற்றி பெற ஒரே காரணம்.
No comments:
Post a Comment