உன் சுவடு(தமிழ் கவிதை) - Love Soul

உன் சுவடு 
உன்னுடன் நான் செல்ல 
காத்திருந்த 
நொடிகள் எல்லாம்
காற்றாய்
 கரைந்து விட்டது !
என் அருகில்
 உன் சுவாசம்
உணர்வதால் 
நீ வந்த சுவடை
அறிந்ததால் ! 
போதும் கண்ணா
உன் கண்ணாமூச்சி !
லவ்லி

மழைகாலம்(தமிழ் கவிதை) - Love Rain Season

மழைகாலம்
ஆயிரம் மழைக்காலங்கள் 
வந்தாலும் உன்
 அருகில் நான்
இருந்த போது என்னில் 
பொழிந்த
 மழையே நான் ரசித்த
மழைக்காலங்களில்
 மிக அழகு !
லவ்லி

காதல் கவி(தமிழ் கவிதை) - Love Story

காதல் கவி - Love Story 
மலர் கொண்டு மலர் 
இணைக்கும் மகரந்தச் 
சோலையில் மாயவன் மனம் 
மயக்குகிறான் 
மயிலிறகால் !
காற்றென 
அவன் தவழ என் 
ஒற்றை குழல் அசைந்தாட 
அவன் மனமும் 
அசைந்ததை
அன்று நான் உணர்ந்தேன் 
காதல் கவியாக !
லவ்லி

கரிசல் காடானேன் - Karishal Kadanen

கரிசல் காடானேன்
உன் நேத்திரங்கள் 
காணாமல் 
என் அகம் 
மலர மறுக்கிறது !
வசந்தகால 
மலர்வனங்களை 
போல் மனம் மயங்க 
துடிக்கிறேன் ! 
ஆனால் நீ வரும் 
வழியில் உன் வதனம் 
தென்படாததால் 
வறண்ட வான் 
பார்த்த கரிசல் காடகாவே 
இருக்கிறேன் !
லவ்லி

கனல் காதல் - Shadow Love

கனல் காதல்
காரிருள் கரியவன் கதிரவனை
மறைத்து ! 
வான் பார்த்த கழனி 
தன்னை வாஞ்சையாய் தழுவ
நினைத்து ! 
அவன் தீண்ட இயலாஅவளை
 தன் கண் கனல் 
கொண்டு நனைத்தான் 
காதலாக !
லவ்லி

காதல் காலம் - Time to love

காதல் காலம்
உன்னை நான் தழுவவில்லை !
உன் கரம் 
நான் பற்றவில்லை !
என் காதல் 
நீ என்று 
எண்ணவில்லை ! 
ஆனால் 
நிதமும்  உன் தழுவலுடன் 
என் காலையும் ! 
உன்‌ கரச்சூட்டில் 
மையலும் உன் காதலில் 
என் காலமும் 
மகிழ்வாய் மலர்கிறது !
லவ்லி

அர்ப்பணித்தல் - love Contribution

அர்ப்பணித்தல்
காதலின் வெளிப்பாடாய் 
நீ கூறிய வார்த்தைகள்
 ராதை 
கிருஷ்ணனுக்கு உரியவள் !
ஆனால் 
கிருஷ்ணன் ராதைக்கு
உரியவரா ?  
எத்தனை பொருள் 
பொதிந்த கேள்வி !
 காதல் 
ஒருவரை மற்றொருவரிடம்
முழு மனதாய் 
அர்ப்பணித்தல்
எதிர்பார்ப்புகள் 
ஏதும் இன்றி !
காதல் மட்டுமே 
பிரதானமாய் !
லவ்லி

காதல் அலை- Love Wave