மோர் குழம்பு - பட்டுக்கோட்டை சமையல் - more kuzhambu

மோர் குழம்பு:

தேவையான பொருட்கள் :
தயிர் -                         1/2 லிட்டர் நன்கு அடித்து வைத்துகொள்ளவும்
பச்சை மிளகாய்     - 4
மஞ்சள் தூள்             -   1/2 டிஸ்பூன்
சீரகத்தூள்                 - 1 டிஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டிஸ்பூன்
வெண்டைக்காய்   - 5
உப்பு                            - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு                           - 1/4 டிஸ்பூன்
கறிவேப்பிலை - 1  கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு


செய்முறை :
அடுப்பை பற்ற வைத்து அதில் வானலியை வைத்து சூடானதும் ஆயில் தேவையான அளவு ஊற்றி ஆயில் சூடானவுடன் தாளிக்க கடுகு  சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வெண்டைக்காய் சேர்த்து அதன் வழவழப்பு போகும் வரை நன்கு வதக்கவும். வெண்டைக்காய் நன்கு வதங்கிய பின்  சீரகத்தூள், மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அடுப்பை குறைந்து வைத்து விட்டு அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். கொதிக்க விட கூடாது. சுவையான மோர்க்குழம்பு தயார் .- அகல்யா பிரேம் 

ரௌத்திரம் பழகடி - Brave Women

ரௌத்திரம் பழகடி
சதைகளாய் நினைக்கும் 
சாக்கடைகளை 
சுத்தம் செய்ய
ரௌத்திரம் பழகடி 
என் கண்ணம்மா !
பிண்டங்களை பெரும் 
பொருளாய் எண்ணும் 
அற்ப  நாய்களின் 
ஆட்டத்தை அடக்கிட 
ரௌத்திரம் பழகடி 
என் கண்ணம்மா !
குரோதத்தில் கொதிக்கும் 
என் 
நெஞ்சம் கொதிப்படக்க 
ரௌத்திரம் 
பழகடி 
என் கண்ணம்மா !
லவ்லி

நினைவுகளின் துளி - thoughts on waterfall

நினைவுகளின் துளி
என்றும் இல்லாத 
அளவிற்கு
இன்று அதிக மழை 
பொழிந்தது !
நினைவுகளை எண்ணி என்றும்
பொழியும் 
மழை தான் 
என்றாலும் இன்று சற்றே அதிகம்
விழி என்ற  
மேகத்தில் இருந்து 
வீழ்ந்த மழைத்துளி 
காய்ந்த 
கன்னங்களில் 
அவன் 
நினைவிற்கு 
நீர் ஊற்றுகிறது !

உன் சுவடு(தமிழ் கவிதை) - Love Soul

உன் சுவடு 
உன்னுடன் நான் செல்ல 
காத்திருந்த 
நொடிகள் எல்லாம்
காற்றாய்
 கரைந்து விட்டது !
என் அருகில்
 உன் சுவாசம்
உணர்வதால் 
நீ வந்த சுவடை
அறிந்ததால் ! 
போதும் கண்ணா
உன் கண்ணாமூச்சி !
லவ்லி

மழைகாலம்(தமிழ் கவிதை) - Love Rain Season

மழைகாலம்
ஆயிரம் மழைக்காலங்கள் 
வந்தாலும் உன்
 அருகில் நான்
இருந்த போது என்னில் 
பொழிந்த
 மழையே நான் ரசித்த
மழைக்காலங்களில்
 மிக அழகு !
லவ்லி

காதல் கவி(தமிழ் கவிதை) - Love Story

காதல் கவி - Love Story 
மலர் கொண்டு மலர் 
இணைக்கும் மகரந்தச் 
சோலையில் மாயவன் மனம் 
மயக்குகிறான் 
மயிலிறகால் !
காற்றென 
அவன் தவழ என் 
ஒற்றை குழல் அசைந்தாட 
அவன் மனமும் 
அசைந்ததை
அன்று நான் உணர்ந்தேன் 
காதல் கவியாக !
லவ்லி

கரிசல் காடானேன் - Karishal Kadanen

கரிசல் காடானேன்
உன் நேத்திரங்கள் 
காணாமல் 
என் அகம் 
மலர மறுக்கிறது !
வசந்தகால 
மலர்வனங்களை 
போல் மனம் மயங்க 
துடிக்கிறேன் ! 
ஆனால் நீ வரும் 
வழியில் உன் வதனம் 
தென்படாததால் 
வறண்ட வான் 
பார்த்த கரிசல் காடகாவே 
இருக்கிறேன் !
லவ்லி

காதல் அலை- Love Wave