தமிழ் காதல் - Tamil Love


தமிழ் காதல்

மயங்கினேன் உன் வார்த்தையில்

காதலிக்கவில்லை !

இன்பம் கொடுத்தாய் என் தமிழால்


செவிகள் இனிக்கும்படி !


மனதை திருட எத்தனித்தாய் நீ


திருடன் என்று உரைத்து கொண்டே !


களவு போக துணை வந்தாள் என்னவள் 

தொலைத்தேன் என் ஹிருதயத்தை !

என் ஏக்கம் தெரிந்து என்னை


வீழ்த்தினாய் உன் வார்த்தையால் !

களவு பேச்சுக்கள் கால நேரம்


கடந்து நம்மை கலந்துரையாட தூண்ட !

பேசிய வார்த்தையில் எல்லாம் தமிழ்


ததும்ப காதல் கசிந்துருகி உன்னை விட


உன் தமிழை அதிகம் நேசித்தேன் !

தமிழாய் என்னுள் நுழைந்து குருதியில்


கலந்து இன்று தமிழில் வார்த்தைகள்


தீர்ந்து போனதாய் என்னை உணரவும்


செய்துவிட்டாய் உன் மௌனத்தால் !

இன்று உன்னிடம் தூது செல்ல என் 


தமிழை தவிர என்னவள் கூட இல்லை என்னிடம் !

ஆக்ஸிஜன் இழப்பு - Oxygen Loss


   ஆக்ஸிஜன் இழப்பு
தாய்மைக்கு முதல் அடி எடுத்து வைக்க 
அது முக்கால் அடி 
சருங்குகிறது 
எத்தனை முறை வீழ்ந்தாலும் !

எழுந்து நிற்கும் 

உறுதியுடன் 
இதயத்துடிப்பை அதிகபடுத்துகிறாள்  !

ஆக்ஸிஜன் குறைபாட்டை 

சரிசெய்ய செய்ய 
எத்தனை முறை 
முயற்சித்தாலும் ? 

நடப்பது என்னவோ 

ஆக்ஸிஜன் இழப்பு 
மட்டும் தான் !


துணை தேடாதே ! - Alone-me

துணை தேடாதே ! 
தனிமையை பழகிக்கொள் 
உற்றவர் 
யாரும் துணை 
வருவதில்லை 
இறுதிவரை !
உன்னை நினைத்தவர் நீ 
நினைத்தவர் என எவரும் ஏதோ 
ஒரு நிலையில் 
ஒருவரை விட்டு 
ஒருவர் தனித்திருக்க நேரும் 
அதன் காரணங்கள் 
மட்டுமே
வேறாக இருக்கக்கூடும் !
லவ்லி

ஏது ? ஏன் ? எப்படி ? (தமிழ் கவிதை) Why-How-which-love

ஏது ? ஏன் ? எப்படி ?
நான் புன்னகைத்து கொண்டே 
இருக்கிறேன் !
 என் விழிகள் 
இதழ்கள் என அனைத்தும் 
புன்னகையால் பூக்கிறது ! 
என்னால் என்னை சுற்றி 
அனைவருக்கும் புன்னகை 
தவழுகிறது ! 
ஏன் என் மனம் 
மட்டும் எதையோ தொலைத்ததை
போல் உணர்கிறது ! எதை 
தொலைத்தேன் என்று 
விளங்கவில்லை ! 
மனம் மட்டும்   
எதையோ இழந்து விட்டதாய் 
உணர்த்துகிறது !
 எது ஏன் எப்படி அறியேன்
 அறியவும் விழையேன்
என் மனமே !
லவ்லி

கலையாத உறவு நீ (தமிழ் கவிதை)- My Dream With You

எங்கோ புதைக்கப்பட்ட 
நினைவுகளை தோண்டி 
எடுக்கின்றன ! 
சிலரின்
வார்த்தைகளும் 
பார்வைகளும் !
நீ உரைத்த பின் அதே 
சொற்களை பிறர் 
கூறும் போது
அதில் எந்த சுவாரஸ்யமும் 
இருப்பதில்லை 
அதிலும் நீயே
வருகிறாய் ! 
என் கண்களை 
விட்டு  கலையாத உறவாய் 
என்றும் நீ !
லவ்லி

என்னுள் வாழ்பவன் (தமிழ் கவிதை) - with you heart

என்னுள் வாழ்பவன்
என் மழலையில் 
அருகில் இருந்த
நீ ! 
என்‌ இளமைக்கு 
துணையிருந்த நீ ! 
மணவயதில் 
மாலையிட்ட நீ ! 
என்‌  அறுபதுகளிலும் 
அன்பாய் 
அருகில் வேண்டும் நீ !
உன்னை மறவேன் 
பிரியேன்
என்னுள் வாழ்பவனே !
லவ்லி

இசையே இன்பம் (தமிழ் கவிதை) - Forever Love Music

இசையே இன்பம்

எத்தனை ஆனந்தம் என்னுள்
இசை 
அனைத்திற்கும் மருந்து !
மகிழ்ச்சி , சோகம் , வலி 
இன்னும்எண்ணற்ற 
உணர்வுகளுக்கு 
மகிழ்வான தீர்வை தரும் நம்மவர்
நினைவையும்
 மனதில் தேக்கி 
வைத்து கொள்ளவும் ! 
இன்று 
என் மகிழ்ச்சி எல்லையை கடந்த 
ஆழிபேரலை தான் 
ஆனால் 
அழிவை தருவதல்ல 
ஆனந்தத்தை நல்குவது !
லவ்லி

என்ன காரணம் ? (தமிழ் கவிதை) -what-is-a-reason

என்ன காரணம் ?

உன் நினைவு 
கொடுக்கும் வலி
கூட எனக்கு சுகமாக ஏன் 
இருக்கிறது ! 
புரியவில்லை நான் 
ஏன் வருத்தம் கொள்ளவில்லை !
என்னுள் ஏதும் பிழையா ? 
உன் நினைவுகள் 
மட்டுமே நான்
மகிழ காரணம் !
 ஏதோ ஒரு 
குழப்பம் உள்ளது அந்த 
மகிழ்வின் 
இறுதியில் கண்கள்
மட்டும் கண்ணீர் சிந்துகின்றன !

மன்னவனின் மன மயக்கம் (தமிழ் கவிதை) -krishnan-leelaigal

மன்னவனின் மன மயக்கம்
ஆயிரம் முறை பார்த்திருப்பேன் 
உன்னை ஆனாலும் இன்று நீ 
புதியவளாக என் முன் ! 
பட்டுத்தி  வாஞ்சையாய் 
வளையல் 
பூட்டி இரு புருவ மத்தியில் 
திலகம் இட்டு கருமை அருவியாம்உன் 
குழலில் மலர் சூடி உன் 
ரோஜாக்கரங்களில் 
மருதாணி 
மேலும் வண்ணம் சேர்க்க ! 
மங்கை அவள் கால் 
சிலம்பொழிக்க  
அன்னமாய் 
அசைந்து வருகையில் இந்த 
மன்னவனின் மனமும்
மயங்காதோ பேரழகில் !
லவ்லி

என் ஜீவன் ஆனாய் (தமிழ் கவிதை)- Inside-with-you

என் ஜீவன் ஆனாய்
ஏய் எங்கு சென்றாய்
என் கண்களை 
விட்டு விலகி
நீ காற்றில்
 கரைந்தாலும்
நிதம் என் சுவாசமாய்
என் ஜீவனில் 
கலந்துவிட்டாய்
என் கண்ணா !

நான் உணர்ந்தேன் நீ (தமிழ் கவிதை) - feeling with your love

உரைத்து விட்டாய் உன் உள்ள
காதலை ! 
வேறுபாடுகளை
உணர்த்தி உணர்த்தி அவள் 
வேதனைகளை அதிகப்படுத்தி
நீயும் வேதனையுற்று ! 
பார்வைகள், பேச்சுக்கள் , 
தழுவல்கள் என இவைகள் 
மட்டும் இணைந்தது அல்ல
காதல் ! 
மனதின் பரிமாற்றங்கள்,
எண்ணத்தின் தழுவல்கள் , 
தொலைதூரம் கூட 
தொலைந்து
போன நிமிடங்கள் என
அனைத்தும் இணைந்ததே 
காதல்உணர்ந்து உணர்ந்து உள்ளம் 
உருகுவதே காதல் ! 
நான் உணர்ந்தேன் நீ........
லவ்லி

கர்வம் கலைந்தேன் - (தமிழ் கவிதை) - My piece of love


கர்வம் கலைந்தேன்
என் புன்னகையை எண்ணி
கர்வம் கொண்டேன் ! 
இன்று 
ஆயிரம் மலர்களின் இதழ்கள்
மலர்ந்ததை
 கண்ட போது
என் கர்வம் ஒடிங்கி போனது
என்னுள்ளும் 
இதழ்  கொண்டு 
காதல் அம்பை 
ஏய்துவிட்டாள் !
லவ்லி

என் நிலவே (தமிழ் கவிதை) - full moon is mine with love

என் நிலவே
என் இதயக்கூட்டில் இருந்து 
தூரத்து நிலாவான 
உன்னை 
ரசித்து கொண்டு இருந்தேன் 
மகிழ்வாய் ! 
இந்த மேகத்திற்கு
ஏன் இத்தனை வெறுப்பு என் 
மீது என் நிலவை 
நான் ரசிக்க
முந்தானை  கொண்டு முகம்‌ 
மறைக்கிறாள் !
 சொல்லி விடு 
அவளிடம் நான் 
மூத்தவள் என்று 
காலத்திலும் காதலிலும் !
லவ்லி

இணையம் அன்பு (தமிழ் கவிதை) - Love-forever

இணையம் அன்பு
மறக்கவும் விலகவும் 
விரும்புகிறேன் நீ கூறிய 
வார்த்தைகளில் எனக்கு பொய்
என்று தோன்றியவற்றை ! 
நினைக்கவும் இணைக்கவும்
விரும்புகிறேன் நீ கூறிய காதல்
வார்த்தைகளை ! நிகழுமோ 
தொலையுமோ என்‌ மனம்
உன்னோடு மீண்டும் இணையா
உன் அன்போடு !
லவ்லி

ஏழடிக்கான ஏக்கம் (தமிழ் கவிதை) - feeling of love (Tamil Kavithaigal)

ஏழடிக்கான ஏக்கம்
என் பாதம் தொட்டு உன் உரிமையை 
நிலை நாட்ட விரும்பினாய்
நானும் அதற்காகவே 
காத்திருக்கிறேன்
உன் கைகளால் நீ என்
உரிமையை நிலைநாட்ட
வானில் தெரியும் அவளை 
இருவரும் இணைந்து 
காண
ஏழடி எடுத்து வைத்து 
உன்னவள் ஆக 
நானும் ஏக்கம் கொள்கிறேன்

நதியே நீ எங்கே (தமிழ் கவிதை)- Where my heart (Tamil Kavithaigal)

நதியே நீ எங்கே
உன்னை தேடி அலைந்தது 
போதும் இந்த தேடல் 
என்னை எங்கெல்லாமோ 
அழைத்து சென்று விட்டது !
ஒரு நதி போல் இனி ஓடுவதற்கு என்னிடம் 
பாதை இல்லை இங்கே தங்கி விடுகிறேன் !
நீயாக என்னை சேர்வாய் என்ற
எண்ணத்தில் காத்திருக்கிறேன் 
விரைவாய் விரைவாக !

மன்னித்து விடு மனமே (தமிழ் கவிதை) - Forgive my heart (Tamil Kavithaigal)

மன்னித்து விடு மனமே
மன்னித்து விடு மனமே என்றுமே 
உன்னை நான் உடைத்து 
கொண்டே இருக்கிறேன் ! 
உன் வலிகளை 
உணர்கிறேன் 
இருந்தும் நான் உடைக்கும் 
போதெல்லாம்!
நீ என்னிடம் கொண்ட 
காதலை மட்டுமே 
காண்கிறேன் காதலே !
உன்னை என் மனம் முழுவதும் 
உணர்கிறேன் இனி
 நான் உடைந்தாலும் கூட 
உன்னை உடைய விடமாட்டேன்!
உண்மை தான் 
இன்று நான் 
அடைகிறேன் 
நீ உடையாமல் இருக்க !

ஆழி பேரலையான காதல் (தமிழ் கவிதை) - Deep one side love (Tamil Kavithaigal)

ஆழி பேரலையான காதல்
உன்னால் தான் நான் இன்று 
என்னையே ரசிக்க 
ஆரம்பித்தேன் !
ஆனால் அங்கு 
தான் உணர்ந்தேன் 
நான் என்னை ரசிக்கவில்லை !
உன் வார்த்தைகளை தான் 
ரசிக்கிறேன் என்று! 
உன் காதல் கடலில் கலந்து மூழ்கி 
உன்னுள் இணைந்து விட்டேன்!
உன்னில் இருந்து 
என்னை பிரித்து 
செல்ல யாராலும் இயலாது!
ஆழி பேரலையாக அடித்து 
செல்லும் உன் காதல் !

மீண்டும் ராதாகிருஷ்ணராய் (தமிழ் கவிதை) - Again love story - Radha Krishnan - (Tamil Kavithaigal)

மீண்டும் ராதாகிருஷ்ணராய்
மீண்டும் பிருந்தாவனத்தில்
நாம் ராதாகிருஷ்ணனாய் 
பிறக்க வேண்டும் அங்கே யமுனை
நதி கரையோரம்
 நீ குழலிசைக்க உன் குழல் ஓசையில் 
நான் என் உலகம் மறக்க வேண்டும் !

பௌர்ணமி நிலவில் நம் ராசலீலை தொடரவேண்டும் 
அங்கே குயில்கள் நம் காதல் 
கீதம் பாட வேண்டும் வனம் 
எங்கிலும் நம் காதல் பரவும்பொழுது மரங்கள்
மலர்கள் சொரிந்திட வேண்டும் !

இறுதி வரை நான் உன் காதலாக
மட்டுமே இருக்க வேண்டும்
உன்னை விட்டு பிரியும் 
ஒரு நாள் மட்டும் இம்முறை 
அந்த பிருந்தாவனம் சந்திக்கக் கூடாது !

உன் கைகள் கோர்த்த ஒரு நொடி (தமிழ் கவிதை) - Minutes of Love (Tamil Kavithaigal)

உன் கைகள் கோர்த்த ஒரு நொடி
உன் விரலோடு விரல் 
கோர்த்த 
அந்த நொடி கோடி யுகங்கள்
 உன்னை 
கூடிக்கிடந்ததாய் 
தோன்றுதே உன் தீண்டல்
 என்னை 
ஒவ்வொரு நொடியும் 
மரணித்து உயிர் 
பெற செய்கிறது

முரண்பாடான காதலின் மூத்தவர்கள் (தமிழ் கவிதை) - Genius Lover (Tamil Kavithaigal)

முரண்பாடான காதலின் மூத்தவர்கள்
முரண்பாடான காதலில் வெற்றி 
கண்ட முதல்வர்கள் அவளின் மனம் மட்டுமே 
அவனுக்கு தேவைப்பட்டது !
ஆயிரம் கோபியர்களின் நடுவில்
 ராதை காதல் மட்டுமே 
கண்ணனுக்கு கண்ணில் பட்டது !
மூத்தவள் ஆனாலும் அவள் 
அன்பில் அளவளாவுவதை 
விரும்பியவன் !
அவன் புல்லாங்குழல் இசைக்கு 
தன் மனதை பறிகொடுத்தவள் !
இணையா காதல் ஆனால் என்றும் 
அவனை அழைக்க
 உன் பெயர் தேவைப்பட்டது
ராதாகிருஷ்ணன் !

கணையாழியின் காதல் ( தமிழ் கவிதை) - Krishnan Love (Tamil Kavithaigal)

கணையாழியின் காதல்
நீ கொடுத்த கணையாழியை 
கையில் அணிந்து 
உன் வரவை 
எதிர்பார்த்து காத்திருக்கும்
சகுந்தலை நான்
ஊடல் கொண்ட 
போது எல்லாம் நம் 
நினைவுகளில் நீல கடலில் 
கரைந்த பொழுது 
கணையாழியும் என்னை 
கை விட்டது
உன் நினைவுகள் 
மட்டுமே துணை 
கொண்டு துயில் கொள்கிறேன்
என் நினைவற்று 
நீ உன் மாளிகையில் 
மனம் மகிழ நான் 
உன் நினைவுகளில் 
முழ்கி பசலை 
கொண்டு வாடுகிறேன் !

தனிமை (தமிழ் கவிதை) - Silence for End of Love (Tamil Kavithaigal)


தனிமை - Silence for End of Love 
அன்று நாம் தனிமையில் 
இருந்ததை
ஆயிரம் கண்கள்
பார்த்தாய் உணர்ந்தேன்!
ஆனால் 
இன்று ஆயிரம் 
கண்கள் 
என்னை பார்த்தும் 
தனிமையை 
உணர்ந்தேன் 
காரணம் இன்று 
என் அருகில்
நீ இல்லாததால் !

மனம் ஏங்கும் மழலை தாகம் - Thirsty for Baby


மனம் ஏங்கும் மழலை தாகம்

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சேர்ந்தவள் 
அடிவயிறு நிரம்பாததால் 
அழைகளிக்கபடுகிறாள் அனாதையாக !
இரத்தத்தில் உதிக்கும் 
சூரியனை பெற்றெடுக்க
 முயல்கிறாள் ஆனால் மேற்கில் 
மறைந்தவனோ உதிக்க 
மறுக்கிறான் இவள் மடியில் !

தூக்கனாங்குருவி கூடு - baya weaver nests

தூக்கனாங்குருவி கூடு
எனக்காய் என்னை சுற்றி நான் 
கூடு வெய்து கொண்டு இருக்க
அதன் துணையாய் 
நீ வந்து உன்
காதல் கொண்டு கூட்டை 
முழுமை பெற செய்தாய் ! 
நீ வெய்த கூட்டில் நான் உன் 
காதலின் பாதுகாப்பில் இதமாய்
இடம் கொண்டேன் 
நீ பறந்த 
பிறகும் உன் காதலின் கதகதப்பு
என்னை இனிமை பெற 
செய்கிறது ! 
என் இந்த 
தூக்கனாங்கூட்டில் என்னையும்
உன் நினைவையும் தவிர 
வேறொன்றுமில்லை 
என் இறுதிவரை 
என் இதயமானவனே !
லவ்லி

இருமுனை அம்பு - Tow way heart or bow

இருமுனை அம்பு
இருமுனை கொண்ட அம்பை 
இதழில் 
வைத்ததை உரைத்து 
அந்த அம்பில் 
நீ பதித்த இதழின் 
ஈரம் இன்னும் காயவில்லை ! 
அதற்குள் நீ என்‌ கண்களில் 
ஈரம் காட்டி சென்றுவிட்டாய் ! 
இதழின் ஈரம் மனதில் காயவில்லை ! 
உன்
நினைவினால் என் 
விழியின் 
ஈரம் காயபோவதுமில்லை !
லவ்லி

என்னவள் என்னும் நிலா - Powerful moon lyrics


என்னவள் என்னும் நிலா 
ஆயிரம் மலர்கள் தராத 
சுகத்தை என் ஒற்றை மகளின் 
பால் வாசம் தருகிறது  !
அவள் கன்னக்குழி அழகில் 
விழுந்து எழுகிறேன் 
ஒவ்வொரு 
முறையும் அவள் 
புன்னகை பூக்கும் போது !
என் வெண்ணிலா தவழ்ந்து
 வரும் அழகில் 
நட்சத்திரங்கள் கூட 
கண் இமைக்காமல் 
என்னவளின் 
அழகை ரசிக்கும் சற்றே 
பொறாமையுடன் !
லவ்லி

இதழோர அம்பு - Arrow on Lip Corner

இதழோர அம்பு
இறைவன்  மங்கையின் 
இதழில்நாண் பூட்டி 
அவள் இதழோர 
புன்னகை என்னும் 
அம்பேற்றி காணும் 
கயவர்களை எல்லாம்
வீழ செய்தான்  
அவள் ஒற்றை
ஓர புன்னகையில் !
லவ்லி

கள்ளத்தனம் காட்டி - Naught Signs


கள்ளத்தனம் காட்டி
என் தனிமையில் நான் ரசித்த நீ
இன்று என்னையே ரசிக்க
வைத்தாய் ! 
உன் கைகள் கோர்த்து நான் 
நடக்க இன்றுமீண்டும் தனிமை‌ 
தீயில் தள்ளிஎன் உள்ளம் 
வேக செய்தாய் !
விரும்பா ஒன்றை ஏன்
விருப்பம் கொள்ள செய்தாய் !
இன்று விருப்பமில்லை என்று 
ஏன் விலகி நின்றாய் !
ஏனடா இந்த கள்ளத்தனம்  
என்கள்வனே !
லவ்லி



விடையில்லா கேள்வி no-end-for-question

விடையில்லா கேள்வி
ஏன் என்னில் நுழைந்து  என்
இதயத்தை சில்லுகளாய் 
உடைத்தாய் உன் காதலால் !
நான் ஒட்ட வைத்திருந்த
இதயத்தை மேலும் 
இணைக்க 
முடியா சில்லுகளாய் சிதற
செய்தாய் !
 என் துன்பம் உனக்கு
ஏன் இத்தனை ஆனந்தம் 
அளித்தது  !
 நான் இயற்கையாய்
இணைந்திருந்த நாட்களை 
இன்று நீ வெறுமையாக்கி
விட்டாய் ! 
என் விடையில்லா
கேள்வியே !
லவ்லி

இதழ் மாற்றம் - keep in love


இதழ் மாற்றம்
நாம் பரிமாறிக்கொண்ட 
இதழ் மாற்றங்களை என் 
பொக்கிஷமாக சேர்க்கிறேன் 
குறைவென்பதே இல்லா
அட்சய பாத்திரத்தில் ! 
நாம் நினைக்கும் போது எல்லாம்
அள்ளி கொள்ளலாம் ஆசையாக
காதலில் கலந்த இதழின் 
இனிமைகளை இன்பமாக !
லவ்லி

பொய் உரைத்தாயா ? Radha-Krishna-Leelaigal

பொய் உரைத்தாயா ?
என் எண்ணங்களில் உன்னை 
கசிய விட்டதை தவிர வேறு 
என்ன தவறிழைத்தேன் ! 
உன்னில் என் மனதை மட்டுமே
தொலைத்தேன்  ! 
உடல் என்ற 
ஒற்றை மறந்தேன் காதல் வெறும்
மோகம் என நான் எண்ணவில்லை !
 உண்மையில் என் உயிர் உருகவே செய்தது 
உன் காதல்  ஆனால் ஏன் 
இத்தனை மாற்றம் நான் 
உணர்ந்த நீ உண்மையா
உன்னை பொய்
 என்று உரைக்க 
கூட என் உள்ளம் துணியவில்லை 
காரணம் 
அன்று நீ கொடுத்தது பொய் 
அல்லவே என் கண்ணா !
லவ்லி

காதல் குழல் krishna flute

காதல் குழல்
மோகம் எது காதல் எது என்று
உணர்ந்தேன் கண்ணா ! 
வேண்டாம் என்ற 
பின் வரும் 
குரோதமே உணர்த்தியது  
வெற்று மோகமே அவள் 
கொண்டாள் என்று  ! 
காதல் 
என்ன வெறும் குழலா 
உடைத்தால் உடைவதற்கு அது 
உயிரின் ஓர் அங்கம் 
உள்ளத்தின்
முழு பகுதி உணர்த்தவற்கு !
லவ்லி

கண்ணார காண - love see

கண்ணார காண
உன் அமுத கானம் கேட்க
காத்திருந்த நொடிகள் 
எல்லாம்
கனவாய் கலைந்து போக 
ஆசை கொண்டேன் !
நீ உதிக்கும் நேரம் பார்த்து 
ஏக்கம் கொண்டேன் !
உன் ஸ்பரிசம் உணர 
என் ஸ்பரிசம்
உயிர்ப்பித்தேன் !
வாடிய போதெல்லாம் வாஞ்சையாக
 நீர் வார்த்தேன் கண்களால் !
காலமும் கரைந்தது
என் கண்ணீரும் 
வறண்டது கண்ணார 
நான் காண காலம் இன்னும் ஆகுமோ !

மனதின் காட்சி பிழை - Radha One Side Love

மனதின் காட்சி பிழை
மாற்று கருத்தை மனம் அறிந்த
பின்னும் ஏன் உன் எண்ணங்கள்
மனதை மயிலிறகாய் 
வருடுகிறது கண்ணா ! உன் 
குழல் இசை கேட்கும் போது 
எல்லாம் ஓடி வந்த ராதை இன்று
உன் குழல் முறிக்க காரணம் 
என்ன ?  மீண்டும் கேட்கும் குழல்
ஓசை அவளை உன்னை நோக்கி
அழைக்க கூடாதென்றா ! ம்ம் ம்ம்
காதல் என்றும்  மனதின் 
காட்சி பிழை தான் !
லவ்லி

சுயவடிவிழந்தாய் - One Side Love

சுயவடிவிழந்தாய்
தன்னை தானே உருக்கி 
கொண்டு பலவித 
அச்சுகளில்
வார்க்கப்பட்ட  உலோகம் தன் 
சுயவடிவு இழக்குமாம் 
அதுபோல
பெண்ணும் தன் உணர்வை  
உருக்கி மற்றவர்களுக்காக
பல்வேறு 
அச்சுகளில் ஊற்ற
அவை உருமாறின மற்றவர் 
எண்ணம் போல் 
அவளின்‌
சுயவடிவும் அங்கே 
மாற்ற தான் படுகிறது !
லவ்லி

இயற்கை மருத்துவம் - தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி -Headache Medicine



அதிமதுர சூரணம்- தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீர
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் பொடி -35 கிராம்
சோம்பு பொடி - 35 கிராம்
சர்க்கரை - 35 கிராம்
கொடிவேலி வேர்ப்பட்டை பொடி - 17 கிராம்



செய்முறை :
அதிமதுரம் , சோம்பு , சர்க்கரை , கொடிவேலி வேர்ப்பட்டை இவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை :
இந்த பொடியை 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து  தேன், நெய் அல்லது பால் இவற்றில் ஏதோ ஒன்றில் கலந்து உட்கொண்டால் தலைவலி , ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீரும்

-Dr.சுஜிதா

வான் மகன் மண் மகள் - Boy and Girl With Love

வான் மகன் மண் மகள்
வான் மகன் அவன் 
கோடை மழையென கொட்டும் 
போது மண் மகளின் மனம் 
என்ன மறுக்கவா‌ செய்யும் ! 
ஆசை என அவன் அணைக்க 
தன் வெட்கத்தை மண்ணவள் 
தன் சுகந்தத்தால்
வெளிப்படுத்தினாள் !
லவ்லி

அவன் வெட்கம் - Lovely Girl - Tamil Kavithai

அவன் வெட்கம் - Lovely Girl 
இருண்ட மேகங்களுக்கு 
இடையே இருந்து  
என்னை 
ரசித்தது இரு நிலாக்கள்  
அவற்றை அவன் 
விழியென 
எண்ணலாமா ! 
என் வளர்ந்த 
குழந்தையின்  வெட்கத்தை 
பார்த்து பூரித்து 
போனேன் !
கண்டதில்லை இது வரை 
அவன் அசட்டு
 சிரிப்பில்
அங்கலாய்த்து விட்டேன் !
லவ்லி

மோர் குழம்பு - பட்டுக்கோட்டை சமையல் - more kuzhambu

மோர் குழம்பு:

தேவையான பொருட்கள் :
தயிர் -                         1/2 லிட்டர் நன்கு அடித்து வைத்துகொள்ளவும்
பச்சை மிளகாய்     - 4
மஞ்சள் தூள்             -   1/2 டிஸ்பூன்
சீரகத்தூள்                 - 1 டிஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டிஸ்பூன்
வெண்டைக்காய்   - 5
உப்பு                            - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு                           - 1/4 டிஸ்பூன்
கறிவேப்பிலை - 1  கொத்து
கொத்தமல்லி - தேவையான அளவு


செய்முறை :
அடுப்பை பற்ற வைத்து அதில் வானலியை வைத்து சூடானதும் ஆயில் தேவையான அளவு ஊற்றி ஆயில் சூடானவுடன் தாளிக்க கடுகு  சேர்க்கவும் கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு வெண்டைக்காய் சேர்த்து அதன் வழவழப்பு போகும் வரை நன்கு வதக்கவும். வெண்டைக்காய் நன்கு வதங்கிய பின்  சீரகத்தூள், மஞ்சள் தூள் , பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும் பிறகு அடுப்பை குறைந்து வைத்து விட்டு அடித்து வைத்துள்ள தயிரை சேர்த்து தேவையான அளவு உப்பை சேர்க்கவும் இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். கொதிக்க விட கூடாது. சுவையான மோர்க்குழம்பு தயார் .- அகல்யா பிரேம் 

ரௌத்திரம் பழகடி - Brave Women

ரௌத்திரம் பழகடி
சதைகளாய் நினைக்கும் 
சாக்கடைகளை 
சுத்தம் செய்ய
ரௌத்திரம் பழகடி 
என் கண்ணம்மா !
பிண்டங்களை பெரும் 
பொருளாய் எண்ணும் 
அற்ப  நாய்களின் 
ஆட்டத்தை அடக்கிட 
ரௌத்திரம் பழகடி 
என் கண்ணம்மா !
குரோதத்தில் கொதிக்கும் 
என் 
நெஞ்சம் கொதிப்படக்க 
ரௌத்திரம் 
பழகடி 
என் கண்ணம்மா !
லவ்லி

நினைவுகளின் துளி - thoughts on waterfall

நினைவுகளின் துளி
என்றும் இல்லாத 
அளவிற்கு
இன்று அதிக மழை 
பொழிந்தது !
நினைவுகளை எண்ணி என்றும்
பொழியும் 
மழை தான் 
என்றாலும் இன்று சற்றே அதிகம்
விழி என்ற  
மேகத்தில் இருந்து 
வீழ்ந்த மழைத்துளி 
காய்ந்த 
கன்னங்களில் 
அவன் 
நினைவிற்கு 
நீர் ஊற்றுகிறது !

உன் சுவடு(தமிழ் கவிதை) - Love Soul

உன் சுவடு 
உன்னுடன் நான் செல்ல 
காத்திருந்த 
நொடிகள் எல்லாம்
காற்றாய்
 கரைந்து விட்டது !
என் அருகில்
 உன் சுவாசம்
உணர்வதால் 
நீ வந்த சுவடை
அறிந்ததால் ! 
போதும் கண்ணா
உன் கண்ணாமூச்சி !
லவ்லி

காதல் அலை- Love Wave