மாவீரன் Warrior

மாவீரன்
கண்கள் கொண்டு அவள் எய்த 
அன்பெனும் அம்பில் என் மனம்
பல போர்களை வெற்றி 
கொண்டுவீர தழும்பு பெற்ற 
மாவீரன் போல் 
பெருமிதம் கொண்டது !
லவ்லி

வானம் பார்த்த பூமி - Sky on Earth

வானம் பார்த்த பூமி
உன்னுடன் மழையில் 
நனைய வேண்டும் ! 
என்ற ஆசையில் 
மழையை கூட வர 
வேண்டாம் என்று
உரைக்கிறேன் ! 
நீ வரும் வரை இந்த 
மண்ணும் வறண்டு
தான் இருக்கும் 
என்னை போல் !
மழைக்காக மண் !
உனக்காக நான் !
லவ்லி

இனிமையான தனிமை - Feeling Alone

இனிமையான தனிமை
உன்னை மறக்க 
எண்ணி உன் நினைவுகளில் 
என்னை மறக்கிறேன் ! 
ஏன் இப்படி ஒரு மனநிலை 
என்னில்
தனிமையை வெறுத்தேன் 
இன்றோ தனிமையை 
ரசிக்கிறேன் ! 
உன் நினைவுகளால் !
லவ்லி

நிழல் நீ - my love shadow you

நிழல்  நீ 
இரு பாதியாய் 
நாம் இருப்பது 
காண்பவர்கள்
கண்களுக்கு
மட்டுமே ! 
உன் 
நிழலாய் நானும்
என் உருவாய் 
நீயும் இருப்பது 
நமக்கு மட்டுமே தெரியும் !
என் நிழலே !
லவ்லி

மையல்-krishna-peacock-feather


மையல்
மயிலிறகில் மையல் கொண்ட 
என் மாதவா !
உன் புல்லாங்குழல் இசை கேட்டு 
 என் மனம் உன் 
மேல் மையல் கொள்கிறது ! 
உன் 
சொல்லில் காதல் கலந்து 
நீ ஊட்டும் இசையை கேட்க 
என் நெஞ்சமெல்லாம் 
உன்னை 
நினைத்து விட்டேன் !
என் காதலனே !

லவ்லி

பாரிஜாதம் - Parijatham

பாரிஜாதம்
உயிர் கொண்ட மலரை
உள்ளங்களில்  அள்ள ஆசை என் செய்ய மலர் மலர்வதில் 
அல்லவா தாமதம் !
அது சரி பாரிஜாதம் மலர பல 
நாட்கள் ஆகும் தானே மலர்ந்து 
விட்டால் இன்பம் என்னும் மணம் உலகையே மயக்கி விடும் 
மனதின் மணத்தால் !
லவ்லி

இளம் தளிர்கள் - Young shoots

       இளம் தளிர்கள்  
மடிந்து போன 
மரங்களில் கூட 
சில சமயம்  இளம் தளிர்கள்
துளிர்ப்பதுண்டு ! 
அதுபோல
துவண்டு போன உள்ளங்களில்
காதல் என்னும்
 இளம் தளிர்கள்
துளிர்ப்பதுண்டு !
நீர் ஊற்றுபவர் 
வான் மழை 
போல் அன்பை ஊற்றுவார்கள்
என்றால் !
லவ்லி

அழ துணை யாரோ - whose is ?

அழ துணை யாரோ
உன்னை நினைத்தால் மட்டும் 
ஏன் என் கண்கள் கனலாகிறது !
காதலாலா அல்லது உன்னை 
காணவில்லை என்பதாலா ! 
நினைத்து அழ நீ இருக்கிறாய் !
நான் அணைத்து அழ யார் 
இருக்கிறார் !
லவ்லி

அழைப்பின் குரல் - love call to kanna!

அழைப்பின் குரல்
ஒரு முறை 
மட்டுமே நீ 
என்னை 
காதலோடு அழைத்தாய் ! 
அதன் பிறகு மற்றவர்கள் 
என் பெயர் 
கூறும் போதெல்லாம் 
அதில் உன் குரல் 
மட்டுமே கேட்கிறது
என் கண்ணா
 !லவ்லி

நீரில் தாமரை - Lotus in Water

நீரில் தாமரை - Lotus in Water
உறவுகள் மாறினாலும் 
உள்ளம் மாறத 
உன் நினைவில் வாழும்‌
அகலிகை நான் !
 தாமரை 
மலராய் நீரில்
 நீ இருக்க உன்னை
நினைவுகளில் மட்டுமே
 தீண்டும்சூரியன்‌ 
நான் ! 
லவ்லி

எவ்வழி செல்வேன் -Which way to go?

எவ்வழி செல்வேன்
எவ்வழி செல்வேன்  
நீ இருக்கும் 
இடம் தெரியாமல் 
அலைகின்றேன் ! 
நான் செல்லும் வழி 
எங்கும் உன் பாதச்சுவடுகள் 
மட்டுமே 
அவ்வழி இவ்வழி 
எவ்வழி எல்லாம் 
உன் வழியாய் 
தோன்ற உன் சுவடுகள் துணை 
கொண்டு 
நின்றுவிட்டேன் !
என் அன்பே !
லவ்லி

அது அப்படி தான் - Love Happend

அது அப்படி தான்
எனக்காக நீ கொடுத்த 
அனைத்தும் எனக்கானதாகவே 
என்றும் இருக்கும் ! ஆனால் ‌நீ 
மட்டும் என்னுடையதாக இருக்க போவதில்லை !ஏனோ‌ என் மனம் 
ஏன் இப்படி நடக்க வேண்டும் 
என்று குழம்புகிறது ! என்
செய்வேன் காதல் அப்படி தானே !
லவ்லி

நிலவு - Moon Light of Love

நிலவு
உன்‌ காதலுக்காக மறை‌
நிலவையும்  பிறை 
நிலவாக்குவேன் 
என்னவளே !
லவ்லி

Moon
For your love I changed 
half moon into
full moon my sweetheart !
Loveable Lovely

பதில் உரைப்பாய் - May Answer me Kanna

பதில் உரைப்பாய்
பிரிவு தான் உங்கள் 
வாழ்வென்று அறிந்தும்
அவளிடம் காதலை உணர்த்த
காரணம் என்ன கண்ணா ? 
நீ  8 மனைவிகளை மணந்தும்
அவளுக்கு மட்டுமே 
காதலி என்ற
அடையாளம்ஏன் கண்ணா ? 
பதில் உரைக்க நேரம் இல்லை 
ஆனால் உன் காதல்மட்டும் 
உணர்த்தி கொண்டே 
இருக்கிறது ! 
உன்னவள் மீது
நீ கொண்ட காதலை !

லவ்லி

Answer Me
you know breakup only happen to
both of you then why you intimate the love to her ?
you get married with 8 wives then to
why she is only one identify your Love ?
but your love intimate how much she loves you!
Loveable Lovely

இரவா ? பகலா ? - Moon and Sun ?

இரவா ? பகலா ?
என்னவனின் கருவிழி காண
காத்திருந்து ! பகலா ? இரவா ?
என்ற நிலை மறந்து ! பகலை
இரவாகவும் ? இரவை 
பகலாகவும் எண்ணி உச்சி 
வேளையில் உறங்கவும் ? 
நடுநிசியில் விழிக்கும் 
செய்கின்றன என் விழிகள் !
லவ்லி

Night or Day ?
Awaiting to see my lovedone eyes!
I forget its day or night ?
Day time felt night ?
Night time Felt Day ? my eyes
sleep on the day time ?
wake up at the midnight?
Loveable Lovely

தேனின் இனிமை - Sweet made of honey

தேனின் இனிமை
உன் அன்பின் அரவணைப்பில் 
காலம் கடத்திவிட்டேன் ! இனி நீ இல்லை என்ற நிலையில் 
என் செய்வேன் என்‌ அன்பே ! 
வேறென்ன உன் இதழோர 
புன்னகை என் விழி முழுவதும்
நிறைந்திருக்கும் இனிமையில் 
என் நாட்கள் தேனின் சுவை 
போல் இனிக்கும் என் ராதா !
லவ்லி

Sweetness of Honey
I just go my life with your cuddle!
now your not with me I don't know 
what I am going to do my love !
Then to your smile fully filled with my eyes
this feel fullfilled coming days with 
more sweater than Honey !
Loveable Lovely

பரவசம் - Ecstasy

பரவசம்
உன் எண்ணங்களில் சிக்கி
தவிக்கும் நான் ! ஒற்றை 
மயிலிறகாய் என்னை வருடி 
செல்லும் உன் புன்னகையால்
என் உள்ளத்தின் அனல்கள் 
பனித்துளிகளாய் பரவசமூட்டுதே
என் கண்ணா !
லவ்லி

Ecstasy
I just struggle with your thoughts !
Like a single feather touch in your sweet smile
just change my heart like a fire with snowfall
felt a ecstasy my love !
Loveable Love

தேடல் - Love Seek

தேடல்
உள்ளத்தில் நினைவுகள் வரும் 
போது உறவுகளின் தேடலும் 
கூடவே வரும் ! 
மறைந்த உறவு 
மனதின் ஆழத்தில் மகிழ்வோடு 
நாம் இருக்க துணை நிற்கும் !
லவ்லி
Search
In heart feel our memories
then we search our loved one!
A invisible love in our hidden heart
to stand with us to be our happiness !
Loveable Lovely 

நேசம் - Love

நேசம்
அவள் உரைக்கிறாள் இது காதல் என்று ? 
அவன் உரைக்கிறான் 
இது மோகம் என்று  ? 
எது காதல் எது மோகம் என்று 
விளங்கவில்லை ?  இருந்தும் 
இவர்கள் புரிதலிலும் பார்வை 
பரிமாற்றங்களிலும் நான் காதல் கலந்த ‌
மோகத்தை காண்கிறேன்!
காதலின்றி மோகம் ஏது ? 
மோகம் இன்றி தான் காதல் ஏது ? 
இரண்டிற்கும் வேறுபாடு 
இருக்கலாம் ? ஆனால் இரண்டறகலந்த 
இரு வேறு உணர்வுகளின்ஒற்றை சங்கமம் நேசம் !
நேசம் உணர்வால் மட்டுமே 
உணரப்படும் ! 
என் மன்னவா !
லவ்லி

Affection
She said its love ?
He said its lust ?
what is the different between love and lust dont know ?
then to I feel the love in to lust with them look each other.
without love where is the lust ?
without lust where is the love ?
both have a difference but
different feels mingle in a one place its called  Affection!
Affection just felt by a sense my Love !
Loveable Lovely

மாலை நேரத்து மதுரம்


மாலை நேர மலர்வனம் தரும் 
சுகந்தத்தின் இனிமையை உணர
நாங்களும் தேனீக்களாக மாறி 
பறந்தோம் ! மாலையின் சூரிய‌ன்
தரும் ஒளி அனைத்து மலர்கள் 
மீதும் தங்க வண்ணம் பூச ! இதழ் விரித்த மலர்கள் மீது வண்டுகள் 
ரீங்காரமிட ! மாலை வேளை 
கொஞ்சல்களை புறாக்கள் 
அரங்கேற்ற ! தேனீக்களான
நாங்கள் மலரின் மதுரத்தை 
அள்ளி பருக நினைத்து ஒருவரைஒருவர் பார்வையால் 
பருகிக்கொண்டோம் எங்கள் மாலை 
நேரத்து மதுரமே !

At the time of sunset blossoms fragrance 
melt a heart like a sweet on that time
we also change ourself like a bee and fly over the 
garden ! 
Evening time sun rays are change the 
place in golden colour  !
on the flower peatels bee are flywith a sound !
Doves are start their love  !
we try to feed a honey in flower but
our eyes are feed our love in more sweeter than honey !
Loveable Lovely

மாலை நேரத்து மதுரம்
மாலை நேர மலர்வனம் தரும் 
சுகந்தத்தின் இனிமையை உணர
நாங்களும் தேனீக்களாக மாறி 
பறந்தோம் ! மாலையின் சூரிய‌ன்
தரும் ஒளி அனைத்து மலர்கள் 
மீதும் தங்க வண்ணம் பூச !
இதழ் விரித்த மலர்கள் மீது வண்டுகள் 
ரீங்காரமிட ! மாலை வேளை 
கொஞ்சல்களை புறாக்கள் 
அரங்கேற்ற ! தேனீக்களான
நாங்கள் மலரின் மதுரத்தை 
அள்ளி பருக நினைத்து ஒருவரை
ஒருவர் பார்வையால் 
பருகிக்கொண்டோம் எங்கள் மாலை 
நேரத்து மதுரமே !

காதல் அலை- Love Wave