கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
காலம் இன்னும் ஆகுமோ ?- Time could be
காலம் இன்னும் ஆகுமோ ?
உன் அமுத கானம்
கேட்க காத்திருந்த
நொடிகள் எல்லாம்கனவாய்
கலைந்து போக
ஆசை கொண்டேன் !
நீ உதிக்கும் நேரம் பார்த்து
ஏக்கம் கொண்டேன் !
உன் ஸ்பரிசம் உணர என் ஸ்பரிசம்
உயிர்ப்பித்தேன் !
வாடிய போதெல்லாம் வாஞ்சையாக
நீர் வார்த்தேன் கண்களால் !
காலமும் கரைந்தது என் கண்ணீரும்
வறண்டது கண்ணார
நான் காண காலம்
இன்னும் ஆகுமோ !
சரியான விதியை எழுத சாவடி நோக்கி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -Happy Tamil New Year kavithai
சித்திரைக்கு உயிரின் மயக்கம்
என்று பொருளாம் !
ஆம் முதலில்
ஆம் முதலில்
பிறக்கும் உயிரை கண்டு நாம்
மயக்கம் கொள்கிறோம்
அல்லவா !
அதே போல் முதலில்
அதே போல் முதலில்
பிறக்கும் மாதத்தில் நாமும்
மயக்கம் கொள்ள தான்
செய்கிறோம் பௌர்ணமி
நிலவொளியில் !
இம்முறை நம்
இம்முறை நம்
முதல் மாதத்தில் மயக்கம்
கொள்ளாமல் மாற்றம் கொடுக்க
வேண்டும் !
நம் விதியை நாம்
நம் விதியை நாம்
எழுதும் மாதத்தின் ஒற்றை
நாள் அனைவரும்
நாள் அனைவரும்
சரியான விதியை
எழுத சாவடிக்கு செல்வோம் !
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புது விடியலை நோக்கி !
லவ்லி
இருவரும் ஒருவரே - Tow Heart One Soul
இருவரின் காத்திருப்பும்
ஒன்றே
கூறுவதில் மட்டுமே குழப்பம் !
இந்த காதல்
ஏன் இப்படி
தடுமாற்றம் தருகிறது
வெளிப்படுத்துவதில் மட்டும் !
ஒருமுறை
வெளிப்பட்டு விட்டால்
உடைந்த அணையில் இருந்து
வெள்ளம்
பெருக்கெடுப்பது
போல் உள்ளத்தின் அன்பு
உடைந்து
காதல் வெள்ளத்தில்
மூழ்கடிக்கிறது !
இன்பம் போல்
துன்பமும் இருவரையும்
ஒருசேர
தாக்குகிறது காதலில் மட்டும் !
லவ்லி
Subscribe to:
Posts (Atom)
-
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி உன் விரலோடு விரல் கோர்த்த அந்த நொடி கோடி யுகங்கள் உன்னை கூடிக்கிடந்ததாய் தோன்றுதே உன் தீண்டல...



