இருவரின் காத்திருப்பும்
ஒன்றே
கூறுவதில் மட்டுமே குழப்பம் !
இந்த காதல்
ஏன் இப்படி
தடுமாற்றம் தருகிறது
வெளிப்படுத்துவதில் மட்டும் !
ஒருமுறை
வெளிப்பட்டு விட்டால்
உடைந்த அணையில் இருந்து
வெள்ளம்
பெருக்கெடுப்பது
போல் உள்ளத்தின் அன்பு
உடைந்து
காதல் வெள்ளத்தில்
மூழ்கடிக்கிறது !
இன்பம் போல்
துன்பமும் இருவரையும்
ஒருசேர
தாக்குகிறது காதலில் மட்டும் !
லவ்லி
No comments:
Post a Comment