மாவீரன் Warrior

மாவீரன்
கண்கள் கொண்டு அவள் எய்த 
அன்பெனும் அம்பில் என் மனம்
பல போர்களை வெற்றி 
கொண்டுவீர தழும்பு பெற்ற 
மாவீரன் போல் 
பெருமிதம் கொண்டது !
லவ்லி

வானம் பார்த்த பூமி - Sky on Earth

வானம் பார்த்த பூமி
உன்னுடன் மழையில் 
நனைய வேண்டும் ! 
என்ற ஆசையில் 
மழையை கூட வர 
வேண்டாம் என்று
உரைக்கிறேன் ! 
நீ வரும் வரை இந்த 
மண்ணும் வறண்டு
தான் இருக்கும் 
என்னை போல் !
மழைக்காக மண் !
உனக்காக நான் !
லவ்லி

இனிமையான தனிமை - Feeling Alone

இனிமையான தனிமை
உன்னை மறக்க 
எண்ணி உன் நினைவுகளில் 
என்னை மறக்கிறேன் ! 
ஏன் இப்படி ஒரு மனநிலை 
என்னில்
தனிமையை வெறுத்தேன் 
இன்றோ தனிமையை 
ரசிக்கிறேன் ! 
உன் நினைவுகளால் !
லவ்லி

நிழல் நீ - my love shadow you

நிழல்  நீ 
இரு பாதியாய் 
நாம் இருப்பது 
காண்பவர்கள்
கண்களுக்கு
மட்டுமே ! 
உன் 
நிழலாய் நானும்
என் உருவாய் 
நீயும் இருப்பது 
நமக்கு மட்டுமே தெரியும் !
என் நிழலே !
லவ்லி

மையல்-krishna-peacock-feather


மையல்
மயிலிறகில் மையல் கொண்ட 
என் மாதவா !
உன் புல்லாங்குழல் இசை கேட்டு 
 என் மனம் உன் 
மேல் மையல் கொள்கிறது ! 
உன் 
சொல்லில் காதல் கலந்து 
நீ ஊட்டும் இசையை கேட்க 
என் நெஞ்சமெல்லாம் 
உன்னை 
நினைத்து விட்டேன் !
என் காதலனே !

லவ்லி

பாரிஜாதம் - Parijatham

பாரிஜாதம்
உயிர் கொண்ட மலரை
உள்ளங்களில்  அள்ள ஆசை என் செய்ய மலர் மலர்வதில் 
அல்லவா தாமதம் !
அது சரி பாரிஜாதம் மலர பல 
நாட்கள் ஆகும் தானே மலர்ந்து 
விட்டால் இன்பம் என்னும் மணம் உலகையே மயக்கி விடும் 
மனதின் மணத்தால் !
லவ்லி

இளம் தளிர்கள் - Young shoots

       இளம் தளிர்கள்  
மடிந்து போன 
மரங்களில் கூட 
சில சமயம்  இளம் தளிர்கள்
துளிர்ப்பதுண்டு ! 
அதுபோல
துவண்டு போன உள்ளங்களில்
காதல் என்னும்
 இளம் தளிர்கள்
துளிர்ப்பதுண்டு !
நீர் ஊற்றுபவர் 
வான் மழை 
போல் அன்பை ஊற்றுவார்கள்
என்றால் !
லவ்லி

காதல் அலை- Love Wave