காலம் இன்னும் ஆகுமோ ?- Time could be

காலம் இன்னும் ஆகுமோ ?
உன் அமுத கானம் 
கேட்க காத்திருந்த 
நொடிகள் எல்லாம்கனவாய் 
கலைந்து போக 
ஆசை கொண்டேன் !
நீ உதிக்கும் நேரம் பார்த்து 
ஏக்கம் கொண்டேன் !
உன் ஸ்பரிசம் உணர என் ஸ்பரிசம்
உயிர்ப்பித்தேன் !
வாடிய போதெல்லாம் வாஞ்சையாக
 நீர் வார்த்தேன் கண்களால் !
காலமும் கரைந்தது என் கண்ணீரும் 
வறண்டது கண்ணார 
நான் காண காலம்
 இன்னும் ஆகுமோ !

மாற்றம் உன்னாலே changed for you

மாற்றம் உன்னாலே
நிஜமென்று நான் 
எண்ண நீ 
என்னவன் இல்லை !
நிழலென்று 
நான் எண்ண நீ
வேற்றவனும் இல்லை !
என் மனநிலையின் 
மாற்றம் 
உன்னாலே !
லவ்லி

சரியான விதியை எழுத சாவடி நோக்கி இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் -Happy Tamil New Year kavithai

சித்திரைக்கு உயிரின் மயக்கம்
என்று பொருளாம் !
ஆம் முதலில்
பிறக்கும் உயிரை கண்டு நாம்
மயக்கம் கொள்கிறோம் 
அல்லவா !
அதே போல் முதலில்
பிறக்கும் மாதத்தில் நாமும் 
மயக்கம் கொள்ள தான் 
செய்கிறோம் பௌர்ணமி 
நிலவொளியில் !
 இம்முறை நம்
முதல் மாதத்தில் மயக்கம் 
கொள்ளாமல் மாற்றம் கொடுக்க
வேண்டும் !
நம் விதியை நாம் 
எழுதும் மாதத்தின் ஒற்றை
நாள் அனைவரும் 
சரியான  விதியை
எழுத சாவடிக்கு செல்வோம் !
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
புது விடியலை நோக்கி !
லவ்லி

இருவரும் ஒருவரே - Tow Heart One Soul

இருவரின் காத்திருப்பும் 
 ஒன்றே
கூறுவதில் மட்டுமே குழப்பம் !
இந்த காதல்  
ஏன் இப்படி 
தடுமாற்றம் தருகிறது
வெளிப்படுத்துவதில் மட்டும் !
ஒருமுறை 
வெளிப்பட்டு விட்டால்
உடைந்த அணையில் இருந்து
வெள்ளம் 
பெருக்கெடுப்பது 
போல் உள்ளத்தின் அன்பு 
உடைந்து 
காதல் வெள்ளத்தில்
மூழ்கடிக்கிறது ! 
இன்பம் போல் 
துன்பமும் இருவரையும் 
ஒருசேர
தாக்குகிறது காதலில் மட்டும் !
லவ்லி

வேறென்ன வேண்டும் - Nothing Else than You

வேறென்ன வேண்டும்
ஒற்றை நாள் வேண்டும் 
உன்னோடு 
நான் இருக்க 
அங்கு மழைத்துளியும் சேர்ந்து 
வேண்டும் நாம் நனைய ! ‌ 
நாள்தோறும் 
உன் வாசம் 
வேண்டும் நான் சுவாசிக்க !
நான் பசியாற
 நீ அமுது ஊட்ட 
வேண்டும் ! 
அன்பு என நம் 
வாழ்வில் ஆயிரம் மழலைகள் 
வேண்டும் ! 
இருவரி 
திருக்குறளாய் நாம் வாழ்வில்
இணைந்து 
இருக்க வேண்டும்!
வேறென்ன வேண்டும் வாழ்நாள் 
முழுவதும் 
நீ மட்டுமே வேண்டும் !
லவ்லி

அக மகிழ்ச்சி - Happy - Forever

அக மகிழ்ச்சி
மழை தூறலின் மயக்கத்தில் 
நான் இருந்தேன் ! 
மழை தொட்ட
 மண்ணின் சுத்தத்தை நான் 
உணர என்னுள் 
இருந்து நீயோ !
ஏனடி எட்ட நிற்கிறாய் 
உன்னவன்உனை 
தீண்ட வந்துள்ளான் ! 
அவன் தேடலை குறைத்து 
அவன் தீண்டல் 
நீ பெறுவாய் ! 
அவனும் அகம் மகிழ்வான் !
லவ்லி

கயல்விழி அவள் - kayal vizhi aval

கயல்விழி அவள்
கற்றை கூந்தல் 
காற்றில் ஆட
இந்த பாவி மனமும் 
அவள் 
ஒற்றை விழி பார்வையில் 
தடுமாற !
கயல்விழி அவள் கண் 
கொண்டு என்னை 
பார்த்தால் என் ஜீவன்
அவள் வாழ்வின் 
வழி செல்லுமே !

என் சிறகாய் - My Wings Lyrics


என் சிறகாய்
ஏற்றங்கள் நான் கொள்ள 
என்னுடன் இருந்தவன் !
தன் எண்ணங்களால் எனக்கு
என்னை உணர்த்தியவன் ! 
வானில் தும்பியாய் நான் பறக்க
என் சிறகாய் இருந்தவன் !
உச்சி வேளையில் கழனி நீர் 
போல் குளுமை கொடுத்தவன் !
என்னவன் !
லவ்லி

குரலோசை - kuralosai


குரலோசை
இன்று என் உறக்கத்தில் 
உன்குரல் கேட்டு
 விழித்தேன் ! 
அந்த 
ஏகாந்த சூழலில் 
உம் திருவாய் 
மொழிந்து என் பெயர் 
அழைத்தது என் செவிகளில் 
அமுதமாய் ஒலித்தது ! 
திகட்டாத உன் குரல் 
ஓசை என்னில்
குழலோசையாக  மாறி 
புன்முறுவல் பூக்க செய்தது !
லவ்லி

என்னவன் யார் அவன் ? - who's is he

என்னவன் யார் அவன் ? - 

எண்ணங்களால்
விவரிக்க முடியாதவன் !
என்னில் ஏராளமாய்
இன்பமாக இம்சை செய்தவன் !
என் கனவுகளை
தன் கனவாக எண்ணியவன் !
கவிகளிலே கதை
படித்து காலங்களை கண் 
முன்னே காட்டி சென்றவன் !
என்றும் எண்ண
அலைகளில் என்னை 
நீந்த வைத்து
கரை சேர்த்தவன் !
என் உள்ளத்தின் இச்சையை
 நான் இசைக்காமல்
அவனே இசைந்தவன் !
ம்ம்ம்ம் வேறெண்ண
சொல்ல அவன் 
என்னவன் என்பதை தவிர !
லவ்லி

வானவில்லின் வண்ணம் Rainbow-Colors

வானவில்லின் வண்ணம்
என்னவள் என்‌ வீட்டில்
 தவழ்ந்து
வரைந்த கோலம் 
நான் மட்டும் காண ! 
பார்வையில்லாதவர்கள்
அழித்தாலும் ! 
என்னவள் கோலம்
என் கண்களில் 
என்றும் மழை 
நின்ற பின் வரும் 
வானவில் போல 
வண்ணமயமானது !

லவ்லி

காதல் அலை- Love Wave