வேறென்ன வேண்டும் - Nothing Else than You

வேறென்ன வேண்டும்
ஒற்றை நாள் வேண்டும் 
உன்னோடு 
நான் இருக்க 
அங்கு மழைத்துளியும் சேர்ந்து 
வேண்டும் நாம் நனைய ! ‌ 
நாள்தோறும் 
உன் வாசம் 
வேண்டும் நான் சுவாசிக்க !
நான் பசியாற
 நீ அமுது ஊட்ட 
வேண்டும் ! 
அன்பு என நம் 
வாழ்வில் ஆயிரம் மழலைகள் 
வேண்டும் ! 
இருவரி 
திருக்குறளாய் நாம் வாழ்வில்
இணைந்து 
இருக்க வேண்டும்!
வேறென்ன வேண்டும் வாழ்நாள் 
முழுவதும் 
நீ மட்டுமே வேண்டும் !
லவ்லி

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave